ஆங்கில மருத்துவம் என்றோ அலோபதி என்றெல்லாம் ஒரு மருத்துவம் கிடையாது. அது வேறுபாடு தெரியவேண்டும் என்பதற்காக கொடுத்த பெயர் தானே ஒழிய அதற்கு பெயர் அறிவியல் மருத்துவம் அல்லது நவீன மருத்துவம்.
அறிவியல் மருத்துவம் தான் சிறந்ததா மற்றவை எல்லாம் சிறந்தது இல்லையா எனக்கேட்கிறவர்களுக்கு : சந்தேகமே வேண்டாம், Modern medicine தான் சிறந்த மருத்துவம்.
பொது ஜனங்களுக்கு ஒரு எளிய கேள்வியை முன்வைக்கிறேன் :
எத்தனையோ பெயர்களில் மருத்துவம் இருக்கிறது. ஒரு நோயாளியின் உடலில் கத்தியை போட்டு அறுக்கிற உரிமையை அரசாங்கம் எந்த டாக்டருக்கு வழங்கியுள்ளது? எம்பிபிஎஸ் படிச்ச டாக்டருக்குத்தானே! ஏனென்றால் அவர் தான் நோய்களை பற்றி படிப்பதற்கு முன்னரே ஒரு உடலின் அமைப்பியல் Anatomy, இயங்கியல் Physiology படிக்கிறார்.
ஒருத்தர் ரோடு ஆக்ஸிடென்ட் ல தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்து கிடக்கிறார். அவரை எந்த டாக்டர் கிட்ட கூட்டிட்டு போவீங்க?
அடுத்தது மருத்துவ அறிவியல் என்பது மூடி மறைக்காமல் ஒளிவுமறைவற்றதாக இருக்கவேண்டும். அமெரிக்காவில் படிச்ச ஒரு டாக்டர் சென்னை ஆஸ்பத்திரியில் வந்தாலும் சர்ஜரி செய்ய முடியும். நான் பண்ற மருந்து என் ஊரு ஆளுங்களுக்குத்தான் கேட்கும், அதுக்குள்ள என்னென்ன கலந்துருக்கேன் என்பதை என் சக மருத்துவரிடம் கூட சொல்லமாட்டேன் என்பதற்கு பெயர் பாரம்பரிய மருத்துவம் கிடையாது டுபாக்கூர் மருத்துவம்.
அடுத்தது மருத்துவம் என்றால் அதில் பேத்தாலஜி Pathology என்ற ஒன்று இருக்கவேண்டும். எந்த மருத்துவத் தில் Pathology இருக்கிறது?
ஒருத்தருக்கு காய்ச்சல் னா நெற்றிய தொட்டு பார்த்து உடம்பு சூடா இருக்கு என சொல்வது நீங்களோ நானோ செய்வது. அதை மட்டுமே வைத்துக்கொண்டு வைத்தியம் பார்ப்பதற்கு பெயர் மருத்துவம் அல்ல. குறைந்தபட்சம் தெர்மாமீட்டரை கொண்டு உடலின் வெப்பநிலை எவ்வளவு என்பதை துல்லியமாக அளக்கவேண்டும்!
அனாட்டமி தெளிவாக இருப்பதால் தான் நவீன மருத்துவத்தால் மனுஷனுக்கும் வைத்தியம் பார்க்க முடிகிறது. நாய் பூனை மாடு குரங்குங்கும் வைத்தியம் பார்க்க முடிகிறது. மனுஷனுக்கு வைத்தியம் பார்க்க இத்தனை மாற்று மருத்துவ முறையாளர்கள் போட்டியில் உள்ளனரே ஏன் மிருகங்களுக்கு மாற்று மருத்துவ முறைகள் இல்லை?
உடலின் ஒவ்வொரு பாகங்களுக்கென தனித்தனி அனாட்டமி பிசியாலஜி சிகிச்சை முறைகள் இருப்பதால் தான் நவீன மருத்துவத்தில் ஒவ்வொ ரு உறுப்பு மண்டலத்துக்கும் தனித்தனி டாக்டர் இருக்கிறார். சிட்டியிலேயே பெரிய கார்டியாலஜிஸ்ட் ட போய் டாக்டர் நீங்க பெரிய ஹார்ட் சர்ஜன் ஆச்சே என் கண்ணுல கேட்டராக்ட் இருக்கு Cataract surgery பண்ணுங்க என்றால் பண்ணமாட்டார். Ophthamic surgeon க்குத்தான் அனுப்புவார். உடம்பிற்கு ஏற்படுகிற எல்லா வகையான பிரச்சினைக்கும் நான் ஒரே டாக்டரே போதும் என சொல்கிற மருத்துவமுறை அல்ல நவீன மருத்துவம்.
அடுத்தது மருத்துவ அறிவியல் என்பது உயிரோடு இருப்பவர்களின் காய்ச்சலுக்கு மருந்து தருவது மட்டுமே அல்ல. ஒருத்தன் செத்துட்டான் னா எப்படி செத்தான், எத்தனை மணிக்கு செத்தான் எல்லாத்தையும் கண்டுபிடிக்கறதும் சேர்த்துத்தான் மருத்துவம். ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாலா, எத்தனை பேர் பாலியல் வல்லுறவு செய்தனர், விந்தணுவை வச்சு எவன் ரேப் பண்ணான் என கண்டுபிடிக்கறதும் அறிவியல் மருத்துவம் தான். ஒரு வருஷத்துக்கு முன்ன புதைக்கப்பட்ட பிரேதத்தை தோண்டியெடுத்து உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பதை கண்டுபிடிப்பது என இது எல்லாம் சேர்ந்தது தான் ஒரு மருத்துவம்.
அடுத்தது பக்க விளைவுகளைப் பற்றி சொல்கிறார்கள். ஆமாம் பக்கவிளைவு இருக்கிறது தான். விளைவு என்ற ஒன்று இருந்தால் பக்க விளைவு என்ற ஒன்றும் இருக்கத்தான் செய்யும். கேன்சருக்கு கதிரியக்க சிகிச்சை அளித்தால் பக்க விளைவாக முடி கொட்டும் தான். அதற்காக பக்க விளைவுகளே இல்லாமல் சூரணம் கொடுத்து கேன்சரை குணப்படுத்துவோம் என்று சொல்வது டுபாக்கூர்.
அரசாங்கமே சித்தா, ஆயுர்வேதம், ஓமியோ என மருத்துவக்கல்லூரிகளை நடத்துகிறது அதிலே படித்து அந்தந்த மருத்துவர்களாக வெளியே வருகிறார்கள். தவறேதுமில்லை. வாருங்கள் வந்து கிளினிக் போடுங்க, வைத்தியம் பாருங்க. நம் நாட்டின் ஜனத்தொகைக்கு இன்னும் எத்தனை டாக்டர்கள் வந்தாலும் தேவைதான். ஆனால் நவீன அறிவியல் மருத்துவத்தை விட நாங்க தான் பெஸ்ட், சூப்பர், நவீன மருத்துவம் கூடாது என சீன் போட்டா உங்களை அறிவியல்பூர்வமாகவே தோலுரிப்பதை தவிர்க்க முடியாது.
நான் டாக்டர் லாம் கிடையாது. எனக்கு இருக்கிற பகுத்தறிவை கொண்டு சிந்திக்கிறவன். வேறு ஏதாவது இதில் சந்தேகம் இருந்தால் கேளுங்கள். என்னால் முடிந்தவரை பதிலளிக்கிறேன். தெரியாத ஒன்றை தெரியாது என ஒப்புக்கொள்வதில் எனக்கு தயக்கமேதுமில்லை..!
-சிவசங்கரன் சரவணன்
No comments:
Post a Comment