பாப்பா பாட்டு- காமராஜர்
-------------------------------------------------
காமராஜர் வந்தாரே
நல்லா ஆட்சி செஞ்சாரே
நீயும் நானும் படிக்கவே
மதிய உணவு தந்தாரே
பல அணைகள் கட்டி தந்தாரே
பள்ளி மனைகள் கட்டி தந்தாரே
நல்ல திட்டம் பல போட்டாரே
குலக்கல்வி தடை செஞ்சாரே
சாதி மதம் பாராமல்
சமநீதி காத்த ஐயாவாம்
காந்தி தாத்தா போலவே
கருணை மிக்க தலைவராம்
விருது நகரு ஊரிலே
சிவகாமி யம்மா மடியிலே
அவதரித்த தலைவராம்
எங்க ஊரு காந்தியாம்...!
-சிவசங்கரன் சரவணன்
No comments:
Post a Comment