// திமுகவில் இருக்கும் ஈழ ஆதரவாளர்களையும் தமிழ் உணர்வாளர்களையும் இணையத்தில் எழுதும் சில திமுகவினரே விலக்கிவிடுவார்கள் // என்று டுபாக்கூர் திடீர் குபீர் ஈழ வியாபாரிகள் இப்போது திடீரென திமுக மீது கரிசனம் காட்டுகிறார்கள்.
ஈழ ஆதரவு என்றால் என்னவென்று தெரியுமா இந்த வியாபாரிகளுக்கு?? இன்று புலிகளை போற்றிக்கொண்டு ஈழத்துக்காக போலிக்கண்ணீர் வடிக்கிற இந்த வியாபாரிகள் ஈழத்துக்காக ஒரு மயிறையாவது இழந்திருக்கிறார்களா??
ஈழத்துக்காக பதவியை இழந்த ஒரே கட்சி திமுக. ஈழத்துக்காக ஆட்சியையே இழந்த ஒரே கட்சி திமுக தான். (1989 திமுக ஆட்சி ஈழ ஆதரவுக்காகத்தான் கலைக்கப்பட்டது) தமிழகத்தில் 40 வயதை கடந்தவர்களுக்கு இதெல்லாம் நன்றாகத் தெரிந்திருக்கும். 1991 சட்டமன்ற தேர்தல் வருகிறது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்ற நிலை நிலவுகிறது. தேர்தல் பிரச்சார கூட்டத்தில் திருபெரும்புதூரில் வைத்து விடுதலைப்புலிகள் ஏற்பாட்டின் பேரில் அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்படுகிறார். ஒட்டுமொத்த தேர்தல் நிலவரமும் தலைகீழாக மாறுகிறது. திமுக வெறும் இரண்டே இடங்களில் வென்று வரலாற்று படுதோல்வி அடைகிறது. திமுக கட்சிக்காரர்களை தமிழகம் முழுதும் தேடி தேடி அடிக்கிறார்கள். புலிகளின் கொடூரத் தாக்குதலில் ராஜீவ் சிந்திய ரத்தத்தைப் போலவே தமிழ்நாட்டில் திமுக தொண்டர்கள் அடிவாங்கி ரத்தம் சிந்தினார்கள்.
வேறு எந்த அரசியல் கட்சியாக இருந்திருந்தால் புலிகள் தங்களுக்கு செய்த கெடுதல்களால் ஈழ ஆதரவு நிலைப்பாட்டையே மாற்றிக்கொண்டிருக்கும். ஆனால் திமுக செய்யவில்லை. ஏனென்றால் திமுகவிற்கு முக்கியம் ஈழ விடுதலை தானே தவிர புலிகள் அல்ல. இன்னும் சொல்லப்போனால் ஆரம்பம் முதலே திமுகவிற்கு புலிகள் மீது பற்றுதல் ஏதும் கிடையாது. ஆனால் ஈழ ஆதரவு எப்போதும் உண்டு. அதன் காரணமாகவோ என்னவோ திமுக புலிகளுக்கு எதிராக எந்த நிலைப்பாட்டையும் எடுத்ததில்லை, புலிகள் அத்துணை கெடுதல்கள் புரிந்தகிறகும். ஏதோ ஒரு வகையில் ஈழ விடுதலை சாத்தியமானால் சரி என்பதே திமுகவின் நிலைப்பாடாக இருந்தது.
தமிழகத்தில் இரண்டு பிரதான கட்சிகள் திமுக அதிமுக . எம்ஜியார் புலிகளை ஆதரித்தார். அவருக்குப் பின் அந்த கட்சியின் முதல்வரான ஜெயலலிதா புலிகள் தலைவர் பிரபாகரனை தூக்கில் போடவேண்டும் என்று தீர்மானம் இயற்றுகிற அளவுக்கு மிக கடுமையான புலி எதிர்ப்பு நிலையை எடுத்தார். இத்தனைக்கும் அவர் முதன்முறையாக முதலமைச்சராக உதவியர்களே புலிகள் தான். ஆனால் கலைஞர் தன்னுடைய உணர்வில் ஊறிப்போன ஈழ ஆதரவு காரணமாக ஈழப் போராட்ட குழுக்கள் எவர்மீதுமே விரோதம் காட்டாமல் தான் இருக்கிறார்.
நிலைமை இப்படியிருக்க, 2005க்கு பிறகு இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே வை தோற்கடித்து ராஜபக்சே ஆட்சிக்கு வருகிறார். ராஜபக்சே எப்படி ஆட்சிக்கு வந்தார், அதில் புலிகளின் பங்கு என்ன என்பதை தனியாக ஒரு பதிவாகவே எழுதலாம். அதன்பிறகு அமைதி ஒப்பந்தத்தை மீறி புலிகள் போரைத் துவக்குகிறார்கள். அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குததலுக்கு பிறகு உலக நாடுகள் அனைத்தும் ஆயுதக்குழுக்களுக்கு எதிராக கை கோர்த்து நிற்க ஆரம்பித்துவிட்டன. போரில் இலங்கை ராணுவத்தின் கை ஓங்கத்தொடங்கியவுடனே சண்டையை நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்திலிருந்து எழ ஆரம்பித்துவிட்டது. இந்தியாவில் நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி ஜெயிக்க போகிறது, அப்படி ஜெயித்தால் தனி ஈழம் அங்கீகரிக்கப்படும் என்று இங்கிருக்கும் டுபாக்கூர் ஆட்களின் பேச்சை கேட்டுக்கொண்டு புலிகள் போரை நிறுத்தாமல் தொடர்ந்து சண்டை இட்டுக்கொண்டே இருந்தனர். ஒரு கட்டத்தில் தோல்வி உறுதி எனத் தெரிந்தபின்பும் சுமார் ஒரு லட்சம் அப்பாவித் தமிழர்களை குறுகிய பரப்பளவில் தங்களுக்கு மனிதகேடயமாக பயன்படுத்தி அட்டூழியம் செய்தனர் புலிகள். மனித குல வரலாற்றில் இனி எவருக்குமே நடக்கக்கூடாத இனப்படுகொலை நடந்து முடிந்தது.
இதைத்தொடர்ந்து தமிழகத்தில் சிலபல திடீர் குபீர் ஈழ வியாபாரிகள் தோன்றினார்கள். அதுநாள்வரையில் புலிகளுக்கு நிதியுதவி அளித்துவந்த அயல்நாட்டு ஆட்கள் என்ன செய்வதென்று இருந்த நிலையில் இந்த வியாபாரிகள் அந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தனர். எந்த பிரபாகரனை கொண்டுவந்து தூக்கில் போடவேண்டும் என ஜெ சொன்னாரோ, அதே பிரபாகரன் படத்தை வைத்துக்கொண்டு அதே ஜெ ஜெயிப்பதற்கு வெட்கமே இல்லாமல் வேலை செய்தார்கள். இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று மனதார பொய் சொன்னார்கள். 2011 ல் இலையும் மலர்ந்துவிட்ட து.
அப்படியே விட்டால் வெளிநாட்டிலிருந்து வருகிற பணம் நின்றுவிடுமே என்ன செய்வது என்று அவ்வப்போது மெழுகுவர்த்தி ஏந்துவது மற்றும் அரசியல் கட்சி ஆரம்பிப்பது என அவரவர் தங்கள் வழிகளில் வியாபாரத்தை தொடர்ந்து நடத்த ஆரம்பித்தனர். பொதுவாக இதுபோல நிதியுதவி செலுத்துகிற ஆட்களில் பாதி பேருக்கு சண்டையை ரசிக்கிற மனநிலை தான் இருக்கும். ஈழத்தில் ரத்தம் பார்த்து முடிச்சாச்சு இனி தமிழ்நாட்டில் ரத்தம் பார்க்கவேண்டும் என்பதே அவர்கள் எண்ணம். அதற்கு திமுக அதிமுகவை எதிர்த்தாக வேண்டும். அதிமுகவை எதிர்க்க முடியாது, அந்தம்மா சொருவி சுண்ணாம்பு தடவிடும். இருக்கவே இருக்கு எவ்ளோ அடிச்சாலும் தாங்குற திமுக என்று திமுகவிற்கு எதிராக தொடர்ந்து அவதூறு செய்ய ஆரம்பித்தனர். தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தை வீழ்த்திவிட முயன்று தோற்றுப்போன இந்துத்வ மதவாத சக்திகள் இந்த முறை தங்களுடைய அடியாளாக இந்த வியாபாரிகளை பயன்படுத்த ஆரம்பித்தன.
இதெல்லாம் தெரிந்துமே கூட திமுகவினர் அமைதியாகத்தான் இருந்தார்கள். இயல்பிலேயே உண்மையான ஈழ ஆதரவாளர்களான திமுகவினர் இனப்படுகொலைக்கு பிறகு மிகுந்த மனவருத்தத்தில் இருந்தனர். தங்களுக்கு இருந்த ஈழப்பற்று காரணமாக 2011 வரை தங்கள் மீது பரப்பப்பட்ட அவதூறுகளை கூட பெரிதுபடுத்தாமல் அமைதி காத்தனர். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் உடனுக்குடனே பதிலடி கொடுப்பது தான் திமுகவினரின் பலமே. ஆனால் இந்த விஷயத்தில் அவர்களுடைய உணர்வுப்பூர்வமான ஈழ ஆதரவு காரணமாக, அப்பாவி உயிர்களை மனித கேடயமாக பயன்படுத்திய புலிகளைப் பற்றிக்கூட எதுவும் பேசாமல் இருந்தனர்.
2011 தேர்தலுக்குப் பிறகு 2016 தேர்தலில் மீண்டும் திமுகவிற்கு எதிராக ஈழ வியாபாரிகள் வியாபாரத்தை தூசு தட்ட ஆரம்பித்தனர். தேர்தலுக்குத் தேர்தல் வரும் சீசன் ஈழ வியாபாரிகளுக்கு நிதியுதவி தருபவர்கள் பூராவும் புலிகளுக்கு நிதியுதவி தந்தவர்கள் தான். எனவே இந்த வியாபாரிகளும் இனப்படுகொலைக்கு முக்கிய காரணமாக இருந்த புலிகள் அமைப்பை ஆதரித்துக்கொண்டே திமுகவிற்கு எதிராக அவதூறு பரப்பும் செயலை தொடர்ந்து செய்துவந்தனர். சாது மிரண்டால் கொள்ளாது என்பதைப்போல தற்போதுதான் திமுகவினர் புலிகளின் உண்மையான முகத்தை தோலுரித்துக்காட்ட ஆரம்பித்துள்ளனர். புலிகள் ஆதரவு வேறு , ஈழத்தமிழர்கள் ஆதரவு வேறு என்பதை தெளிவுபடுத்தத் தொடங்கியுள்ளனர்.
இதுநாள்வரையில் உண்மையான ஈழ உணர்வு காரணமாக என்ன சொன்னாலும் பெரிது படுத்தாமல் புலிகளின் அட்டூழியம் எதைப்பற்றி யும், கட்டின மனைவி செய்யும் துரோகத்தை மறைக்க நினைக்கும் கணவனைப் போல பொதுவெளியில் பேசாத திமுகவினர் இப்போது உண்மைகளை பேச ஆரம்பித்திருப்பது ஈழ வியாபாரிகளுக்கு கலக்கத்தை தர ஆரம்பித்துவிட்டது. ஈழ ஆதரவோ எதிர்ப்போ இரண்டுமே தமிழ்நாட்டு வாக்கரசியலில் எப்போதுமே வேலைக்காகாது. எனவே அதைப்பற்றி எந்த அலட்டலும் வியாபாரிகளுக்கு இல்லை. ஆனால் பிரச்சனை என்னவென்றால் இதுநாள்வரையில் தங்கள் வியாபாரம் செழிக்க காரணமாக இருந்த திமுகவினரே இப்போது அதற்கு உலை வைக்க ஆரம்பித்துவிட்டார்களே என்பதுதான் அவர்களுடைய பயம்!
No comments:
Post a Comment