அரசியல் பழகுவது எப்படி??
நான் கவனித்தவரையில் நிறைய நண்பர்களுக்கு அரசியல் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. அதே சமயம் தங்களுக்கு எல்லா அரசியல் வரலாறுகளும் தெரியவில்லையே, அது குறித்து படித்ததில்லை என்ற ஆதங்கமும் இருக்கிறது. எல்லோராலும் எல்லாவற்றையும் படித்துத் தெரிந்துவைத்திருக்க முடியாதுதான். முடிந்தவரை இனியாவது அவற்றை தெரிந்துகொள்ள முயற்சி செய்வோம்.
இரண்டாவது நம்மை குழப்புகிற அடுத்த விஷயம் சித்தாந்தங்கள். திராவிடங்குறாங்க, இந்துத்துவங்கறாங்க, கம்யூனிசம், வலதுசாரி, இடதுசாரி, தமிழ்தேசியம், தலித்தியம் இப்படி ஏகப்பட்டவை இருப்பதால் இதில் யார் சொல்றது நல்லது எது கெட்டது என்ற சந்தேகமும் ஏற்படுகின்றன. அதுபோக அரசியல் கட்சிகள். திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், பாஜக, பாமக, விடுதலை சிறுத்தைகள் என அதிலேயும் பல இத்யாதிகள். இவை எல்லாம் சேர்ந்து அரசியலை பற்றி தெரிந்துகொள்ளலாம் என்று நினைப்பவர்களைக் கூட பயமுறுத்துகின்றன.
அரசியல் பழகுவதற்கு நீங்கள் ஏதாவதொரு அரசியல் கட்சியில் இருந்தாக வேண்டும் அல்லது உங்களுக்கு ஏதாவதொரு கட்சி சார்பு இருக்கவேண்டும் என்று கூட அவசியம் இல்லை. "எனக்கு இந்த நாடும் நாட்டு மக்களும் நல்லா இருக்கனும், எல்லாரும் சரிசமமா வாழனும், யாரும் யாருக்கும் தாழ்ந்தவர் இல்லை, அதே சமயம் அதற்கான அரசியலையும் நான் பழகவேண்டும் என்ற ஆசை உள்ளது " என்று நினைப்பீர்களேயானால், Dont worry, நான் அதற்கு என்னாலான உதவி செய்கிறேன்.
அரசியல் பழகுவதில் பால பாடம், Basic rule என்னவென்றால் யாரை ஆதரிப்பது என்பதைவிட யாரை புறக்கணிக்கவேண்டும் என்பதுதான் முக்கியம். இதற்கு ஒரு எளிமையான Formula சொல்லித்தருகிறேன்.
தமிழக அளவில் பெரியாரை தூற்றுபவர்கள், தேசிய அளவில் நேருவை தூற்றுபவர்கள் இவர்கள் ரொம்ப ஆபத்தானவர்கள். இவர்கள் டிசைன் டிசைனாக பேசுவார்கள், சில சமயம் நேரடியாக சொல்லமாட்டார்கள் சுற்றிவளைத்து பேசுவார்கள். சமயங்களில் அட ஆமால்ல என நினைப்பது போல கூட இருக்கும். ஆனால் இவர்களை நண்பர்களாக வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாமே தவிர, இவர்கள் பேசுகிற அரசியலை அடியோடு புறந்தள்ளவேண்டும். இந்த Basic rule ஐ நன்றாக புரிந்துகொண்டால் போதும், இனி நீங்கள் தாராளமாக அரசியல் பழகலாம்...!
No comments:
Post a Comment