Thursday, 26 January 2017

இந்தித் திணிப்பு எதிர்ப்பு : சுருக்கமான வரலாறு

ஜனவரி இருபத்தி ஐந்து : மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று. மொழிப்போர் எனப்படும் ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் இறுதிக்கட்டத்தை அடைந்த தினம் இன்று . 1937 இல் காங்கிரஸ் அமைச்சரவை அமைக்கப்பட்ட பொழுது ராஜாஜி ஹிந்தி படிப்பதை மேனிலை கல்வியில் கட்டாயம் ஆக்கினார். குழந்தைக்குத் தாய் கட்டாயப்படுத்தித் தான் பாலூட்ட வேண்டும் என்று விளக்கம் தந்தார். ஹிந்தி ரயில் வண்டி அதில் போனால் வேகமாக முன்னேறலாம் என்றும் சொன்னார்.

பெரியார் கொதித்து எழுந்து சுயமரியாதை இயக்கத்தின் மூலமும் , நீதிக்கட்சியின் மூலமும் போராட்டங்கள் நடத்தினார். ஹிந்தி மற்றும் சமஸ்க்ருதத்தைத் தமிழுக்குப் பதிலாகத் திணிக்கப் பார்க்கிறார்கள் என்கிற எண்ணம் வலுப்பெற்றுப் போராட்டங்கள் நடைபெற்றன . பெண்களும் பெருமளவில் கலந்துகொண்டனர் .தீரர் சத்தியமூர்த்தியும் ராதாகிருஷ்ணன் அவர்களும் காங்கிரசிலேயே ஹிந்தி திணிப்பை எதிர்த்தார்கள்; எனினும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார் ராஜாஜி.
இந்திய குடிமக்கள் மீது ஆங்கிலேய அரசு போலவே கிரிமினல் சட்டத்தைத் தாகூர் மற்றும் ஜின்னாவின் எதிர்ப்புகளைக் கண்டுகொள்ளாமலே பயன்படுத்தினார் ராஜாஜி. நடராசன் என்ற இளைஞர் சிறைக்கொடுமையின் காரணமாக 1939 ஜனவரி 15 அன்று உயிர் நீத்தார். அவரையடுத்து திரு. தாளமுத்து என்ற இளைஞரும் சிறைக்கொடுமை தாங்காது 1939 மார்ச் 13ஆம் நாளன்று சிறைச்சாலையிலேயே இயற்கை எய்தினார்.. கூலிக்கு அமர்த்தப்பட்ட அடியாட்கள் என்று இரண்டு
உயிர்கள் போன பின்னும் போராட்டங்களை விமர்சித்தார் ராஜாஜி
பெண்கள் பலர் குழந்தைகளோடு சிறை சென்றனர் ;பெண்களைப் போராட தூண்டியதற்காகப் பெரியார் ஒரு ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு ஆறு மாதத்தில் உடல்நலம் காரணமாக விடுவிக்கப்பட்டார் .தனித்தமிழ் இயக்கம் வளர்ந்ததும் அப்பொழுது தான்
அதற்குப் பிறகு 1939 இல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து விலகக் கவர்னர் மீண்டும் அச்சட்டத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டார் .காங்கிரஸ் விடுதலைக்குப் பிறகு ஆட்சிக்கு வந்ததும் எல்லா மாநில அரசுகளையும் ஹிந்தியை கட்டாயம் ஆக்க சொன்னது. முதலில் தமிழ் பேசும் பகுதியில் இன்னொரு மொழியாகத் தேர்வு செய்துகொண்டு படிக்க வேண்டிய பாடம் என்று பல மொழிகளைக் கொடுத்து அதில் ஹிந்திக்கு மட்டும் ஆசிரியர்களை அதிகமாக நியமித்து ஹிந்தி திணிப்பை மறைமுகமாக ஆரம்பித்தது ஓமந்தூரார் அரசு. பின்னர்க் குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பிள்ளைகள் பெற்றாலே உயர்கல்விக்குத் தகுதி பெறுவர் என்றது இன்னமும் கொதிப்பை அதிகப்படுத்தியது .

பெரியார் போராட்டக்களம் புகுந்தார் ; ம.பொ .சிவஞானம், திருவி.க. முதலியோரும் எதிர்ப்புகளில் கலந்து கொண்டனர் ; ஒரு வழியாக அரசு போராட்டக்காரர்களின் மீதான வழக்குகளைத் திரும்பபெற்றது ;கட்டாயம் என்பது விருப்பப்பாடம் என்றானது
இதற்கு முன்னமே அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும் பொழுது ஹிந்தி தான் தேசிய மொழியாக வேண்டும் என ஒரு குழு விரும்பியது (அதிலேயே சுத்தமான ஹிந்தி ,ஹிந்துஸ்தான் என இரண்டு குழு இருந்தது தனிக்கதை ). அதை எதிர்த்து தென்னக மற்றும் வங்கத்தைச் சேர்ந்த குழு உறுப்பினர்கள் போர்க்கொடி உயர்த்தினர் ; இறுதியில் தேசிய மொழி என்று ஒன்று இல்லாமலேயே, முன்ஷி அய்யங்கார் திட்டப்படி ஆங்கிலம் மற்றும் ஹிந்தி அதிகாரப்பூர்வ மொழிகள் ஆயின ; பதினைந்து வருடங்கள் வரை இதே நிலை தொடரும் என்றும் , ஐந்து ஆண்டுகள் கழித்து எப்படிப் படிப்படியாக ஆங்கிலத்தை விளக்கி ஹிந்தியை தேசிய மொழியாக்குவது எனப் பரிந்துரைகள் தர ஒரு கமிஷன் அமைக்கப்படும் என்றும்
குறிக்கப்பட்டன .

படிப்படியாக அரசு ஹிந்தியை வளர்த்தது ;சட்ட ஆணைகளில் ஹிந்தியை பயன்படுத்தியது . டால்மியாபுரத்தை கல்லக்குடி எனப் பெயர் மாற்றம் செய்யசொல்லி 1953 போராட்டம் நடந்து இரண்டு திமுகத் தொண்டர்கள் உயிர் விட்டார்கள் . அண்ணா, பெரியார் ,முந்தைய ஹிந்தி ஆதரவாளர் ராஜாஜி ஆகியோர் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலமே தொடர வேண்டும் என்று 1956 இல் கையெழுத்திட்டனர்

ஏற்கனவே அரசியலமைப்பில் சொன்னபடி கேர் கமிஷன் அமைக்கப்பட்டது ; ஹிந்தியை எப்படி முழுப்பயன்பாட்டுக்குக் கொண்டுவரலாம் என அது பல்வேறு யோசனைகள் தந்தது . அக்குழுவின் தென்னக மற்றும் வங்க உறுப்பினர்கள் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர் . கோவிந்த் வல்லபாய் பந் தலைமையில் இதை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது .அதுவும் அதையே சொன்னது . பத்தொன்பது வகையான ஹிந்தி மொழிகள் பேசப்பட்டுக்கொண்டு இருந்த சூழலில் 36 கோடி மக்களில் வெறும் இரண்டரை கோடி மக்கள் மட்டும் பேசிய கடீபோலி ஹிந்தியை தென்னகத்துக்கும்
திணித்தார்கள் மக்கள் மீண்டும் போராட எழுந்தார்கள் .

நேரு ,1959 இல் "ஹிந்தி பேசாத மாநில மக்கள் ஆங்கிலத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் ;ஹிந்தி திணிப்பு செய்யப்பட மாட்டாது என்றார் . பந்த் ரெண்டு ஆண்டுகள் போராடி சாதித்தவற்றைப் பிரதமர் இரண்டு நிமிடங்களில் கெடுத்து விட்டார் எனப் புலம்பினார் ". 1959 இல் தந்த உறுதியை நிஜமாக்க நேரு சட்ட வரைவை கொண்டு வர அதில் ஆங்கிலம் தொடரலாம் என்கிற வார்த்தையை, கண்டிப்பாகத் தொடரும் என மாற்றச்சொல்லி கேட்டார்கள் தமிழர்கள் . shall be என்கிற வார்த்தையைப் போட்டுவிட்டு ஆங்கிலத்தை ஆட்சி மொழியாகத் தொடரலாம் என்கிற இடத்தில் may be போட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியது. நேரு தொடரலாம் எனச் சொன்னதைத் தொடராமலும் போகலாம் என வருகிறவர்கள் கொள்வார்கள் எனப் பயந்தார்கள் .
அதுவே நடந்தது, சாஸ்திரி பிரதமர் ஆனதும் 15 வருடகாலக் காலக்கெடு முடிந்தது எனச் சொல்லி கட்டாய ஹிந்தியை அறிமுகப்படுத்தினார் .தமிழகம் கொதித்து எழுந்தது . 70 பேர் அதிகாரப்பூர்வ பதிவுகளின் படி தீக்குளித்துக் கொண்டனர். ஐம்பாதாயிரம் மாணவர்கள் ஊர்வலமாகப் போனார்கள் ; கலவரங்கள் வெடித்தன. பாரா மிலிடரி படைகள் வந்தன. பக்தவச்சலம் முரண்டு பிடித்தார் .ஒ.வி.அழகேசன் மற்றும் சுப்பிரமணியம் ஆகியோர் பதவி விலக அதைச் சாஸ்திரி ஏற்றார் ; பின்னர் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு பிரிய வழி வகுக்காதீர்கள் என்று சொன்னதற்குப் பிறகு ஹிந்தி திணிப்பு நின்றது. அதற்குப் பிறகு தேர்வுகளில் ஆங்கிலமும் இருக்கும் என அறிவித்தார்கள் .

மும்மொழி கொள்கையைக் கொண்டு வந்தார்கள் ; அதை எதிர்த்தும் தமிழகத்தில் போராட ஹிந்தி கற்கிற வாய்ப்புப் பறிபோனது. 1986 இல் நவோதயா பள்ளிகள் தமிழகம் வரும்பொழுது அதை ஹிந்தி திணிப்பு எனக் கலைஞர் எதிர்த்துப் போராட்டம் நடத்த இந்தியாவிலேயே நவோதயா பள்ளிகள் இல்லாத ஒரே மாநிலம் ஆனது தமிழ்நாடு.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இந்திக்கான கால அளவை அதிகப்படுத்துவது, மொரார்ஜி தேசாய் காலத்தில் துணை கமிஷனர் அல்லது அதற்கு மேலான பதவியில் உள்ள ஹிந்தி கற்காத மாநில அதிகாரிகள் கட்டாயம் ஹிந்தி கற்க வேண்டும் என்று உத்தரவு போட்டது,. ராஜீவ் காந்தி காலத்தில் ஹிந்தி வாரம் கொண்டாட வேண்டும் என்று அறிக்கை வந்தது,மத்திய அரசு அதிகாரிகள் ஹிந்தியிலேயே கையெழுத்துப் போடவேண்டும் என்கிற உத்தரவு, என்.சி.ஆர்.டி. புத்தகங்களில் ஹிந்தி திணிப்புக்கு எதிராகப் போராடியவர்களை முட்டாள்கள் என்று சித்தரித்த கேலிச்சித்திரம் இடம் பெற்றது, சமூக வலைதளங்களில் இந்தியில் மட்டுமே இனி அறிவிப்புகள் என்று அறிவித்தது என்று ஹிந்தி திணிப்புத் தொடர்கிறது. ஹிந்தி திணிப்புக்கு எதிரான எதிர்ப்பை ஹிந்திக்கு எதிரான எதிர்ப்பாகவும் பதிவு செய்வதும் தொடர்கிறது.

நன்றி : பூ கொ சரவணன்.

Wednesday, 18 January 2017

திமுக ஆட்சிகால சாதனைகள்

#கலைஞர் தமிழ்நாட்டிற்க்கு என்ன செய்தார் ? #அறியாமை கேள்விக்கான பதில் இதோ...

1. #போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது கலைஞர்

2. போக்குவரத்தை தேசியமையமாக்கியது கலைஞர்

3. மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர்

4. 1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் #சாலை வழித்தடம் அமைத்தது கலைஞர்

5. தமிழ்நாடு #குடிசை மாற்று #வாரியம் அமைத்தது கலைஞர்

6. #குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர்

7. முதலில் இலவச #கண் சிகிச்சை முகாம் அமைத்தது கலைஞர்

8. பிச்சைகாரர்கள் #மறுவாழ்வு மையம் அமைத்தது கலைஞர்

9. #கையில் இழுக்கும் ரிக்‌ஷா ஒழித்து #இலவச சைக்கில் ரிக்‌ஷா கொடுத்தது கலைஞர்

10. இலவச கான்கிரீட் #வீடுகளை ஒடுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தது கலைஞர்

11. #குடியிருப்புச்சட்டம் (வாடகை நிர்ணயம் போன்றவை) கொண்டுவந்தது கலைஞர்

12. இந்தியாவிலே முதன் முதலில் #காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர்

13. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென #துறை அமைத்தது கலைஞர்

14. அரசியலமைப்பில் பிற்படுத்தபபட்டோருக்கான #அமைப்பை அமைத்தது கலைஞர்

15. அரசியலமைப்பில் #BC - 31%, #SC - 18 % ஆக உயர்த்தியது கலைஞர்

16. P.U.C வரை #இலவசக்கல்வி உருவாக்கியது கலைஞர்

17. #மே 1, #சம்பளத்துடன் கூடிய பொது #விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்

18. வாழ்ந்த மனிதரான #நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்

19. முதல் #விவசாயக்கல்லூரி (கோவை) உருவாக்கியது கலைஞர்

20. #அரசு #ஊழியர்கள் குடும்ப நல திட்டம் தந்தது கலைஞர்

21. அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தது கலைஞர்

22. #மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தது கலைஞர்

23. கோவில்களில் குழந்தைகளுக்கான " #கருணை #இல்லம் " தந்தது கலைஞர்

24. சேலம் #இரும்பு தொழிற்சாலை அமைத்தது கலைஞர்

25. நில விற்பனை வரையரை சட்டம் அமைத்தது கலைஞர்

26. இரண்டாம் அலகு நிலக்கரி மின்உற்பத்தி நெய்வேலி கொண்டுவந்தது கலைஞர்

27. பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலை தூத்துகுடி கொண்டுவந்தது கலைஞர்

28. SIDCO உருவாக்கியது கலைஞர்

29. SIPCOT உருவாக்கியது கலைஞர்

30. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தபபட்டோரில் தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தது கலைஞர்

31. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டுவந்தது கலைஞர்

32. மனு நீதி திட்டம் தந்தது கலைஞர்

33. பூம்புகார் கப்பல் நிறுவனம் தந்தது கலைஞர்

34. பசுமை புரட்சி திட்டம் தந்தது கலைஞர்

35. கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தபபட்டோரில் இணைத்தது கலைஞர்

36. மிக பிறப்படுத்தபபட்டோரில் வன்னியர், சீர் மரபினரை சேர்த்தது கலைஞர்

37. மிக பிற்படுத்தபபட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்

38. தாழ்த்தப்பட்டோருக்கு 18% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்

39. பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்

40. மிகபிர்படுத்தபபட்டோருக்கு இலவச கல்வி தந்தது கலைஞர்

41. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி இளகலை பட்டப்படிப்பு வரை தந்தது கலைஞர்

42. தாழ்த்தப்பட்டோருக்கு #இலவச #கல்வி தந்தது

43. இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்க்கு இலவச மின்சாரம் தந்தது கலைஞர்

44. சொத்தில் #பெண்ணுக்கு சம உரிமையை சட்டமாக்கியது கலைஞர்

45. அரசு வேலை வாய்ப்புகளில் #பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு தந்தது கலைஞர்

46. ஆசியாவிலே முதன் முறையாக #கால்நடை மற்றும் #விலங்குகள் அறிவியல் #பல்கலைகழகம் அமைத்தது கலைஞர்

47. ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்

48. விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்

49. நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது கலைஞர்

50. நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தது கலைஞர்

51. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் அமைத்தது கலைஞர்

52. கர்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்

53. பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது கலைஞர்

54. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்

55. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்

56. டாக்டர் MGR மருத்துவ கல்லூரி நிறுவியது கலைஞர்

57. முதன் முதலில் காவிரி நீதிமன்றம் அமைக்க முற்பட்டவர் கலைஞர்

58. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டுவந்தது கலைஞர்

59. உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு

60. இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தது கலைஞர்

61. மெட்ராஸ், சென்னையாக்கியது கலைஞர்

62. முதல் தடவை விதவை பெண்களுக்கும் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரியில் இடம் அளித்தது கலைஞர்

63. தொழிற்சாலைகளுக்கான வெளிப்படை கொள்கை அமைத்தது கலைஞர்

64. முதல் தடவை விதவை பெண்கள் தொழில் தொடங்க உதவியவர் கலைஞர்

65. கான்கிரீட் சாலை அமைத்தது கலைஞர்

66. தொழிற்முறை கல்வியில் கிராமபுற மாணவர்களுக்கு
15% இடஒதுக்கீடு செய்தது கலைஞர்

67.ஐயன் திருவள்ளுவருக்கு சிலை வைத்தது கலைஞர்

68.தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்றுத் தந்தது கலைஞர்

69.செம்மொழி மாநாடு நடத்தியது கலைஞர்

70.சத்துணவில் கொண்டைக்கடலை, வாழைப்பழம் சேர்த்தது கலைஞர்

71.பால் விலை, பேருந்து கட்டணம், மின்சார கட்டணம் உயர்த்தி மக்களை துன்புறுத்தாதவர் கலைஞர்

72.#விவசாயக்கடனை அறவே தள்ளுபடி செய்து, விவசாய மக்களை காத்தவர் கலைஞர். (2006-2011 வரைஐந்து ஆண்டுகளில் #பட்டினிச்சாவு இல்லாத மாநிலம் தமிழகம்)

73. நியாய விலைக் கடைகளில் மளிகைப் பொருட்கள்(வாசனைச் சாமான்கள், சோம்பு, சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு, வெந்தயம், பிரிஞ்சு இலை, முதற்கொண்டு) அனைத்தும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கச் செய்தவர் கலைஞர். #விலைவாசி அதனால் தான் கட்டுக்குள் இருந்தது அன்று (இன்றைக்கு எத்தனை பெயருக்கு பருப்பு சர்க்கரை முழுமையாக கிடைக்கிறது????)

74.நீங்கள் கூவும் ஈழத் தமிழர்க்காக இரு முறை ஆட்சி துறந்தவர் கலைஞர்.

அரசியலற்ற அரசியல்

கேள்வி : அரசியல் மீதும் அரசியல்வாதிகள் மீதும் உங்களுக்கு ஈர்ப்பு வர என்ன காரணம்?

பதில் : ஒரே பதிலில் சொல்லவேண்டுமென்றால் எல்லோரும் தெரிந்தோ தெரியாமலோ ஏதோவொரு அரசியல் செய்கிறார்கள்.  ஆனால் அரசியல்வாதி ஒருத்தர் தான் மிக நேர்மையாக தான் அரசியல் தான் செய்கிறேன் என்பதை பட்டவர்த்தனமாக வெளிக்காட்டிக்கொண்டே அரசியல் செய்கிறார்.  இந்த நேர்மை மற்றவர்களிடம் இல்லை. 

இந்த நாடு சுதந்திரத்துக்கு பிறகு இந்தளவுக்காவது முன்னேறியிருக்கிறது என்றால் அதற்கு இந்த நாட்டின் அரசியல்வாதிகள் தான் முக்கிய காரணம் என்பதை மனதார நம்புகிறேன் நான்.  அரசியல்வாதி என்றால் கலைஞர்,  ஜெயலலிதா,  ஸ்டாலின்,  மோடி,  ராகுல்காந்தி இவர்கள் தான் என்றல்ல.  ஒரு குக்கிராமத்தின் ஒரு அரசியல் கட்சியின் வார்டு பிரதிநிதியாக இருக்கின்ற ஒருவரும் கூட அரசியல்வாதி தான்.  நான் கிராமத்தில் பிறந்து சிறிய நகரம் ஒன்றில் வளர்ந்தவன். நாங்கள் ரேஷன் கார்டு தொடங்கி,  வாக்காளர் அடையாள அட்டை,  சாதி சான்றிதழ்,  திருமண உதவித்தொகை,  முதியோர் பென்சன் என எல்லா அரசுத்திட்டங்களுக்கும் அரசியல்வாதிகளிடம் தான் போய் நிற்போம்.  அரசியல்வாதிகள் என்போர் எங்கள் உறவினர்கள் போல எங்களின் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கெடுப்பார்கள்.

ஏன் இதெல்லாம் அரசியல்வாதியின் துணையில்லாமல் ஆன்லைனிலோ நேரடியாகவோ நீங்களே செய்துகொள்ள முடியாதா என்று கூட கேட்கலாம்.  "அதான் Card use பண்ணலாமே,  Cash எதுக்கு? " என்று கேட்பதைப்போலத்தான் இதுவும். இன்றைக்கும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமென்றால் எளிதில் அணுககூடிய ஆட்கள் அரசியல்வாதிகளே.   அனைவரும் உத்தம சிகாமணிகள் என்றும் அரசியல்வாதிகள் தான் இந்த உலகத்தில் அத்தனை குற்றங்களையும் செய்பவர்கள் என்றும் நான் ஒருபோதும் நினைத்ததில்லை.  இன்னும் சொல்லப்போனால் நாம் செய்த பாவக்கணக்குகளை கூட தூக்கி சுமக்கும் சுமைதாங்கிகளாகத்தான் அவர்களை பார்க்கிறேன். 

அரசியல்வாதியானேலே காசு செமத்தியா சம்பாதிக்கலாம் என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை . அது மட்டும் உண்மையாக இருந்திருந்தால்,  எல்லோ பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் அரசியலுக்கு போகனும் என்று சொல்லித்தான் வளர்ப்பார்கள்.  என்னை கூட ஒரு சிலர் "ஏன் நீங்கள் நேரடி அரசியலுக்கு வரக்கூடாது? " என்று கேட்டுள்ளார்கள் . நான் அவர்களிடம் சொன்ன பதிலையே இப்போதும் சொல்கிறேன் : அரசியலில் இறங்கவேண்டுமென்றால் நான் இப்போது நல்ல சம்பளத்தில் செய்துவரும் வேலையை விடவேண்டும்.  சம்பளம் வராவிட்டால் நானும் என் குடும்பமும் பூவாக்கு எங்கோ போவோம்?  அடுத்தது வாரத்துக்கு ஒரு Week off,  மாசத்துக்கு 3 லீவு,  வருடத்துக்கு ஒரு Long leave என என் குடும்பத்தோடு சந்தோஷமாக நேரம் செலவழிக்க முடிகிறது என்னால் இப்போது.  அதுவே நான் அரசியலுக்கு போனால் என் குடும்பத்தை விட்டுவிட்டு அடிக்கடி வெளியே சில பல நாட்கள் அலையவேண்டும்.  இவ்வளவு தியாகங்களை செய்ய எனக்கு விருப்பமில்லை,  அதனால் நான் நேரடி அரசியலில் ஈடுபடவில்லை.  அதுமட்டுமின்றி அரசியலில் என்றைக்காவது பெரிய ஆளாகி விடலாம் என்றெண்ணி கைக்காசை எல்லாம் செலவழித்து, குடும்பத்தை நிர்க்கதியாக நிறுத்தி,  வெட்டி கௌரவத்துடன் வீணாய்ப்போன  ஆயிரக்கணக்கான அரசியல்வாதிகள் என் கண் முன்னரே வந்து போகிறார்கள். 

எனவே எனக்கு அரசியல்வாதிகள் மீது வெறுப்பை விட பிரியமே அதிகம் உண்டு.  மீண்டும் உறுதியுடன் சொல்கிறேன் : இந்த நாடு இன்று இந்தளவிலாவது நல்ல நிலைமையில் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் அரசியல்வாதிகளே! 

ஓட்டப்பந்தயத்தில் ஓடவே லாயக்கற்ற ஆட்கள் இரண்டு விதமாக பேசுவார்கள்.  ஒன்று என்னைபோல "ஐயோ என்னால ஓட முடியாது பா " என்று சொல்வார்கள்.  இன்னொன்று "ஓட்டபந்தயமே வேஸ்ட்,  அதில ஓடுறவங்க எல்லாம் Fraud பசங்க " என்று பரப்புரை செய்வார்கள்.  நேரடியாக மக்களிடம் அரசியல் செய்து வெல்ல முடியாத ஆட்கள் தான் "அரசியல்வாதிகளே வேஸ்ட்,  அரசியலே கூடாது,  அரசியல்வாதிகளை ஒழிச்சுக்கட்டனும் " என்பதை வாய்ப்பு ஏற்படும்போதெல்லாம் முன்னெடுப்பார்கள்.  அரசியலற்ற அரசியல் எங்கு போய் முடியும் என நன்கு தெரிந்த காரணத்தால் "ஆமாம் நாங்கள் அரசியல் செய்பவர்கள் தான் " என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டு வேலை செய்யும்  அரசியல்வாதிகளை எனக்கு அதிகம் பிடித்திருக்கிறது..!