Monday, 13 March 2017

திராவிட இயக்கம் : ஏன் எதற்கு எப்படி?

கமல்ஹாசன் பேட்டியைத்தொடர்ந்து ஏற்பட்ட நல்ல விஷயமாக நான் கருதுவது,  ஆங்காங்கே "திராவிடம் னா என்ன?  கொள்கையா அடையாளமா?  ஆந்திரா கேரளா ல ஏன் திராவிடம் பேசப்படுவதில்லை?  " என்ற வாதங்கள் எழுகின்றன.  கேள்வி கேட்பது நல்ல விஷயம் தான்.  திராவிடம் என்ற சொல் எப்படி வந்ததற்கான விளக்கத்தை என் ப்ளாக் இணைப்பை கமென்ட்டில் தந்துள்ளேன்.  விருப்பமுள்ளவர்கள் அந்த நீண்ட விளக்கத்தை படித்துத்தெரிந்துகொள்ளலாம். 

பெரியார் தமிழர் இல்லை அதனால் தான் திராவிட அடையாளத்தை முன்வைத்தார் என சொல்லப்படுகிறது.  இது முற்றிலும் தவறு.  திராவிட அடையாளத்தை பெரியார் முதன்முதலில் கையிலெடுக்கவில்லை.  1882 ம் ஆண்டு சென்னை மாகாணத்தின் கௌரவ நீதிபதியாக இருந்த ஜான் ரத்தினம் என்பவர் தான் முதன்முதலில் திராவிடர் கழகம் என்ற அமைப்பை நிறுவுகிறார்.  அதைத்தொடர்ந்து அவருடன் இணைந்து தாத்தா அயோத்திதாச பண்டிதர் 1885 ம் ஆண்டு திராவிட பாண்டியன்,  திராவிட மித்திரன் ஆகிய இதழ்களை ஆரம்பிக்கிறார். 1891 ம் ஆண்டு அயோத்திதாசர் திராவிட மகாஜன சபா வை ஏற்படுத்துகிறார்.  மகாராஷ்டிராவில் மகாத்மா ஜோதிராவ் பூலே அங்கிருந்த தாழ்த்தப்பட்ட மக்களை ஆதி சூத்திரர்கள் என்று அழைத்த காரணத்தால் அயோத்திதாசர் இங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களை ஆதி திராவிடர்கள் என அடையாளப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. 

1912ம் ஆண்டு மதராஸ் மாகாண பிராமணர் அல்லாத அரசு ஊழியர்களின் அமைப்பான மெட்ராஸ் யுனைடெட் லீக் என்ற பெயரை நடேசனார் மெட்ராஸ் திராவிட சபை என மாற்றியபோது அந்த பதம் பெரியளவில் கவனம் பெற தொடங்கியது.  1922ம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் எம் சி ராஜா அவர்கள் "ஆதி திராவிடர் " என்ற சொல்லை சட்டபூர்வமாக ஆக்குகிறார்.  மேலே சொன்ன எல்லாருமே இப்போது இவர்கள் சொல்கிற அடையாளப்படி வைத்தால் பச்சைத் தமிழர்களே.  இதற்கெல்லாம் பிறகு தான் பெரியார் திராவிடர் என்ற அடையாளத்தை கையில் எடுக்கிறார் . ஆரிய இனம் பிறப்பால் உயர்ந்தது என்ற கருத்துகளை வலுவாக இந்த மண்ணில் ஊன்றியதை அறிந்த பெரியார் ஆரியர்களுக்கு முன்னரே இந்த மண்ணில் திராவிட இனம் இருந்துள்ளதை என்ற காரணத்தால்,  "நீ எந்த அடையாளத்தால் எங்களை மட்டம் தட்ட பார்க்கிறாயோ அதே அடையாளத்தை வைத்தே உன்னை எதிர்க்கிறேன் பார் " என அதை வெற்றிகரமான அரசியலாக மாற்றினார். 

என்னை சில நண்பர்கள் அரக்கன் என செல்லமாக கூப்பிடுவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.  இது நானாக விரும்பி ஏற்றுக்கொண்ட அடையாளம் . ஏன்?  நீங்கள் புராணங்களிலும் இதிகாசங்களிலும் எங்கள் மக்களை அரக்கர்கள் என அடையாளப்படுத்தி அவர்களை கெட்டவர்களாக சித்தரித்தீர்கள். அதே அடையாளத்தை வைத்தே உங்களுக்கு பதிலடி தருகிறேன் பார் என்பது தான் எதிர்ப்பு அரசியல். 

திராவிட இயக்கம் முழுக்க முழுக்க தமிழ்நாட்டில் தமிழர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட இயக்கம்.  நூறு வருடங்களுக்கு மேலாக அது தமிழ்நாட்டில் மட்டுமே இருந்துவருகிறது.  எனவே ஆந்திராவில் ஏன் இல்லை,  கர்னாடாகாவில் ஏன் இல்லை என கேட்பது அபத்தமானது.  திராவிட மொழிக்குடும்பத்தின் தாய் தமிழ் என்பதைத்தவிர வேறெந்த பெரியளவிலும் திராவிட இயக்கம் மற்ற மாநிலங்களில் Influence செய்யவில்லை.  தமிழ் மொழியிலிருந்து தான் மலையாளம் வந்தது,  கன்னடம் வந்தது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள அந்த மக்கள் விரும்புவதில்லை.  (தன்னுடைய தாய் மொழிக்கே தாய் தமிழ் தான் என்ற உண்மையை ஜீரணிக்க முடியாது என்பது வேறுவிஷயம்) .எனவே அவர்கள் இதை ஏற்றுக்கொள்வதில் உள்ள சிக்கலை நாம் புரிந்துகொள்ளவேண்டும் .

எனவே திராவிட இயக்கம் முழுக்க தமிழ்நாட்டில் மட்டுமே தமிழர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட இயக்கம்.  அதனால் தான் ஆட்சிக்கு வந்த வுடன் செய்த முதல் வேலை இந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டியது.  சமூக நீதி,  வர்ண பேதங்களை கடுமையாக எதிர்த்தல்,  தமிழ் மொழியுரிமை, பகுத்தறிவு,  மாநில சுயாட்சி இதெல்லாம் முக்கியமான திராவிட கொள்கைகள்.  திராவிட இயக்கத்தை பற்றி பேச ஆரம்பித்தாலே சிலர்,  தமிழ்நாட்டில் கோயில்கள் அதிகமாகி வருகிறது,  பக்தர்கள் அதிகமாகி வருகிறது இது திராவிட வீழ்ச்சியை காட்டுகிறது என எழுதுகிறார்கள். கடவுள் எதிர்ப்பு என்பது முழுமையான திராவிட கொள்கை அல்ல.  இந்தியாவில் உள்ள சாதிய கொடுமைகளுக்கு காரணம் வர்ண பேதம்.  வர்ண பேதத்திற்கு காரணம் இந்து மதம்.  சாதிய அடுக்கை கொண்ட இந்து மதத்தை எதிர்க்காமல் செய்கிற எந்த புரட்சியும் டுபாக்கூர் புரட்சி தான் . ஹிந்துத்வா வை திராவிட இயக்கம் வெகுஜன மக்கள் பங்களிப்புடன்  மிகச்சரியாக டார்கெட் செய்து அடித்ததால் தான் இத்தனையாண்டுகளுக்கு பிறகும் இந்த மண்ணில் ஹிந்துத்வா வால் நேரடியாக நுழையமுடியவில்லை. 

திராவிட இயக்கம் ஹிந்துத்வா எதிர்ப்பில் எழுந்த இயக்கம் . திராவிடம் ஒழிய வேண்டுமென்றால் அதற்கு முற்றிலுமாக இந்த மண்ணிலிருந்து ஹிந்துத்வா ஒழிய வேண்டும்.  ஹிந்துத்வா ஒழியாதவரை திராவிடத்தின் தேவை இருந்துகொண்டேதான் இருக்கும் .

Friday, 10 March 2017

கலைஞர் ஆட்சிக்கால சாதனைகள்

கலைஞரோட சாதனைகள் சிலவற்றை மட்டும் இங்கே!! பலமுறை இதை பதிவிட்ட திமுக
முகநூல் தொண்டர்களுக்கு நன்றி்...

1. போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது கலைஞர்

2. போக்குவரத்தை தேசியமையமாக்கியது கலைஞர்

3. மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர்

4. 1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது கலைஞர்

5. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது கலைஞர்

6. குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர்

7. முதலில் இலவச கண் சிகிச்சை முகாம் அமைத்தது கலைஞர்

8. பிச்சைகாரர்கள் மறுவாழ்வு மையம் அமைத்தது கலைஞர்

9. கையில் இழுக்கும் ரிக்‌ஷா ஒழித்து இலவச சைக்கில் ரிக்‌ஷா கொடுத்தது கலைஞர்

10. இலவச கான்கிரீட் வீடுகளை ஒடுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தது கலைஞர்

11. குடியிருப்பு சட்டம் (வாடகை நிர்ணயம் போன்றவை) கொண்டுவந்தது கலைஞர்

12. இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர்

13. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென துறை அமைத்தது கலைஞர்

14. அரசியலமைப்பில் பிற்படுத்தபபட்டோருக்கான அமைப்பை அமைத்தது கலைஞர்

15. அரசியலமைப்பில் BC - 31%, SC - 18 % ஆக உயர்த்தியது கலைஞர்

16. P.U.C வரை இலவச கல்வி உருவாக்கியது கலைஞர்

17. மே 1, சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்

18. வாழ்ந்த மனிதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்

19. முதல் விவசாய கல்லூரி (கோவை) உருவாக்கியது கலைஞர்

20. அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம் தந்தது கலைஞர்

21. அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தது கலைஞர்

22. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தது கலைஞர்

23. கோவில்களில் குழந்தைகளுக்கான " கருணை இல்லம் " தந்தது கலைஞர்

24. சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்தது கலைஞர்

25. நில விற்பனை வரையரை சட்டம் அமைத்தது கலைஞர்

26. இரண்டாம் அலகு நிலக்கரி மின்உற்பத்தி நெய்வேலி கொண்டுவந்தது கலைஞர்

27. பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலை தூத்துகுடி கொண்டுவந்தது கலைஞர்

28. SIDCO உருவாக்கியது கலைஞர்

29. SIPCOT உருவாக்கியது கலைஞர்

30. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தபபட்டோரில் தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தது கலைஞர்

31. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டுவந்தது கலைஞர்

32. மனு நீதி திட்டம் தந்தது கலைஞர்

33. பூம்புகார் கப்பல் நிறுவனம் தந்தது கலைஞர்

34. பசுமை புரட்சி திட்டம் தந்தது கலைஞர்

35. கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தபபட்டோரில்
இணைத்தது கலைஞர்

36. மிக பிறப்படுத்தபபட்டோரில் வன்னியர், சீர் மரபினரை சேர்த்தது கலைஞர்

37. மிக பிற்படுத்தபபட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்

38. தாழ்த்தப்பட்டோருக்கு 18% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்

39. பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்

40. மிகபிர்படுத்தபபட்டோருக்கு இலவச கல்வி தந்தது கலைஞர்

41. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி இளகலை பட்டப்படிப்பு வரை தந்தது கலைஞர்

42. தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தது

43. இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்க்கு இலவச மின்சாரம் தந்தது கலைஞர்

44. சொத்தில் பெண்ணுக்கு சம உரிமையை சட்டமாக்கியது கலைஞர்

45. அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30 % இடஒதுக்கீடு தந்தது கலைஞர்

46. ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம் அமைத்தது கலைஞர்

47. ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்

48. விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்

49. நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது கலைஞர்

50. நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தது கலைஞர்

51. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் அமைத்தது கலைஞர்

52. கர்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்

53. பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது கலைஞர்

54. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்

55. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்

56. டாக்டர் MGR மருத்துவ கல்லூரி நிறுவியது கலைஞர்

57. முதன் முதலில் காவிரி நீதிமன்றம் அமைக்க முற்பட்டவர் கலைஞர்

58. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டுவந்தது கலைஞர்

59. உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு

60. இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தது கலைஞர்
61. மெட்ராஸ், சென்னையாக்கியது கலைஞர்

62. முதல் தடவை விதவை பெண்களுக்கும் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரியில் இடம் அளித்தது கலைஞர்

63. தொழிற்சாலைகளுக்கான வெளிப்படை கொள்கை அமைத்தது கலைஞர்

64. முதல் தடவை விதவை பெண்கள் தொழில் தொடங்க உதவியவர் கலைஞர்

65. கான்கிரீட் சாலை அமைத்தது கலைஞர்

66. 24 மணி நேர மருத்துவ சேவை தந்தது கலைஞர்

67. தொழிற்முறை கல்வியில் கிராமபுற மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு

68. சமத்துவபுரம் தந்தது கலைஞர்

69. கிராமங்களில் மினி-பஸ் சேவையை கொண்டுவந்தது கலைஞர்

70. இந்தியாவிலே முதன் முறையாக டாக்டர். அம்பேத்கார் சட்ட கல்லூரி நிறுவியது கலைஞர்

71. பெரியார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்

72. உலக தமிழர்களுக்கு உதவ, தமிழ் மெய்நிகர் பல்கலைகழகம் தந்தது கலைஞர்

73. உருது அக்காடமி தந்தது கலைஞர்

74. சிற்பான்மையினர் பொருளாதார வளர்ச்சி அமைப்பு ஏற்படுத்தியது கலைஞர்

75. உழவர் சந்தை திட்டம் தந்தது கலைஞர்

76. வருமுன் காப்போம் திட்டம் தந்தது கலைஞர்

77. கால்நடை பாதுகாப்பு திட்டம் தந்தது கலைஞர்

78. 133 அடி திருவள்ளுவர் சிலை கன்னியாகுமாரியில்
வைத்தது கலைஞர்

79. டைடல் பார்க் சென்னையில் அமைத்தது கலைஞர்

80. வீட்டுமனை வழங்கும் திட்டம் தந்தது கலைஞர்

81. மாவட்ட, மாநில அளவில் முதல் மூன்று இடங்களில் வருவோருக்கு மேற்படிப்பு உதவி தொகை தந்தது கலைஞர்

82. ஆசியாவிலே மிக பெரிய பேருந்து நிலையம் சென்னை கோயம்பேடு நிலையம் அமைத்தது கலைஞர்

83. விவசாய கூலி வேலை செய்வோர் நல வாரியம் அமைத்தது கலைஞர்

84. பொது கூலி வேலை செய்வோர் நல வாரியம் அமைத்தது கலைஞர்

85. அறிஞர்களுக்கும், தியாகிகளுக்கும் மணிமண்டபம் கட்டியது கலைஞர்

86. 20 அணைகள் கட்டியது கலைஞர்

87. பள்ளிகளில் உணவோடு முட்டை தந்தவர் கலைஞர்

88. 9 மாவட்டங்களில் புதிய மாவத்டாட்சியர் அலுவலகம்
கட்டியவர் கலைஞர்

89. மதுரை நீதிமன்றம் கட்டியது கலைஞர்

90. இலவச பஸ் பாஸ் தந்தவர் கலைஞர்

91. அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தந்தவர் கலைஞர்

92. நமக்கு நாமே திட்டம் தந்தவர் கலைஞர்

93. நலிவுற்ற குடும்பநல திட்டம் தந்தது கலைஞர்

94. 104 கோடி ரூபாயில் சென்னை பொது மருத்துவமணை புதிய கட்டிடம் தந்தது கலைஞர்

95. 13000 மக்கள் நல பணியாளர்கள் நியமனம் செய்தது கலைஞர்

96. முதல் முறையாக 10000 சாலை பணியாளர்களை நியமனம் செய்தது கலைஞர்

97. சென்னையில் 9 மேம்பாலங்கள் தந்தது கலைஞர்

98. 1500 கோடி ரூபாயில் 350 துணை மின்நிலையம் உருவாக்கியது கலைஞர்

99. ஒப்பந்த பணியாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் தந்தது கலைஞர்

100. போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் தந்தது கலைஞர்

101. வேலூர், தூத்துகுடி, கன்னியாகுமாரியில் புதிய மருத்துவ கல்லூரி அமைத்தது கலைஞர்

102. ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் திட்டம்

103. பொது விநியோக திட்டத்தின் மூலம் சமையல் எண்னை மற்றும் பல வீட்டு பொருட்க்கள் நியாயவிலையில் தந்தவர் கலைஞர்

104. 10 சமையல் பொருட்க்களை 50 ரூபாய்க்கு தந்தது கலைஞர்

105. விவசாய கடன் 7000 கோடி தள்ளுபடி செய்தது கலைஞர்

106. சரியான நேரத்தில் வங்கி கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி இல்லை என்றது கலைஞர்

107. மேம்படுத்தப்பட்ட நெல் கொள்முதல் விலை ரூ 1050 ஆக உயர்த்தியது கலைஞர்

108. வகைபபடுத்தப்பட்ட நெல் கொள்முதல் விலை ரூ 1100 ஆக உயர்த்தியது கலைஞர்

109. 172 உழவர் சந்தையாக உயர்த்தியதும் கலைஞர்

110. ஒரு டன் கரும்பின் கொள்முதல் விலை ரூ 2000 ஆக உயர்த்தியது கலைஞர்

111. மாவட்டத்திற்க்குள் நதிநீர் இணைப்பு திட்டம் தந்தது கலைஞர்

112. ரூ 189 கோடி செலவில் காவிரி - குண்டூர் நதிநீர் இணைப்பு திட்டம் தந்தது கலைஞர்

113. ரூ 369 கோடி செலவில் தாமிரபரணி - கருமேனியாரு - நம்பியாரு நதிநீர் இணைப்பு திட்டம் தந்தது கலைஞர்

114. காமராஜர் பிறந்த நாளை கல்வி மேம்பாட்டு தினமாக அறிவித்தது கலைஞர்

115. பொது நுழைவு தேர்வு ரத்து செய்தது கலைஞர்

116. 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயமாக்கியது கலைஞர்

117. 623 கோடி செலவில் 5824 கோவில்கள் புனராமைத்து கும்பாபிஷேகம் பணி செய்தது கலைஞர்

118. அர்ச்சகர்கள், பூஜாரிகளுக்கு இலவச சைக்கில் வழங்கியது கலைஞர்

119. 2 லட்சம் மதிப்புள்ள இலவச மருத்துவ காப்பீடு திட்டம் தந்தது கலைஞர்

120. இதய நோய், சர்க்கரை நோய், புற்று நோய்க்கான " நலமான தமிழகம் திட்டம் " தந்தது கலைஞர்

121. மத்திய அரசோடு இணைந்து 108 ஆம்புலன்ஸ் தந்தது கலைஞர்

122. 25 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி 37 புது நிறுவனங்களை வர செய்து 41,090 கோடி முதலீடை கொண்டுவந்தது கலைஞர்.

123. 37 நிறுவன அனுமதியால் 3 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கியது கலைஞர்

124. 5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு தந்தது கலைஞர்

125. புதிய டைடல் பார்க் திருச்சி கோவை மதுரை திருநெல்வேலியில்யில் உருவாக்கியது கலைஞர்

126. அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டம் தந்தது கலைஞர்

127. பேருந்து கட்டணம் ஏற்றாமல் 13000 புதிய பேருந்துகள் தந்தது கலைஞர்

128. அருந்ததியினர் இனத்திற்க்கு 3% தனி இடஒதுக்கீடு தந்தது கலைஞர்

129. அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளோடு 10,096 கிராம பஞ்சாயத்து உருவாக்கியது கலைஞர்

130. 420 பேரூராட்சிகள் உருவாக்கி " அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம்" தந்தது கலைஞர்

131. அனைத்து இனத்தினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை பெற்று தந்தது கலைஞர்

132. உலக தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகம் நிறுவியது கலைஞர்

133. ஆசியவையே திரும்பி பார்க்க வைத்த புதிய சட்டமன்றம் நிறுவியது கலைஞர்

134. அடையார் சூழியல் ஆராய்ச்சி பூங்கா அமைத்தது கலைஞர்

135. சென்னை செம்மொழி பூங்கா அமைத்தது கலைஞர்

136. கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் தந்தது கலைஞர்

137. ஜப்பான் நாட்டு வங்கி உதவியோடு மெட்ரோ ரயில் திட்டம் தந்தது கலைஞர்

138. ஒக்கேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் தந்தது கலைஞர்

139. ராமநாதபுரம் - பரமக்குடி கூட்டுகுடிநீர் திட்டம் தந்தது கலைஞர்

140. கலைஞர் வீடு திட்டம் தந்தது கலைஞர்

141. முதல் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்தியது கலைஞர்

142. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தது கலைஞர்

143. 119 புதிய நீதிமன்றம் உருவாக்கியது கலைஞர்

144. மாலை நேரம், மற்றும் விடுமுறை தின நீதிமன்றம் உருவாக்கியவர் கலைஞர்

145. அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழகம் திருச்சி கோவை மதுரை திருநெல்வேலியில் உருவாக்கியது கலைஞர்

146. தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய ஆணையம் அமைத்தது கலைஞர்

147. சமச்சீர் கல்வி தந்தது கலைஞர்

148. இலவச வண்ண தொலைக்காட்சி வழங்கும் திட்டம் தந்தது கலைஞர்

149) முதல் பட்டதாரிக்கு ஆண்டுக்கு 20,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு 80,000 பொறியியல் கல்வி கட்டணம் வழங்கியவர் கலைஞர்.

150) இஸ்லாமியர்களுக்கு 3.5% தனி இட ஒதுக்கீடு வழங்கியவர் கலைஞர்..

151) இலவச எரிவாயு உருளை வழங்கியவர் கலைஞர்.

152) பேருந்து கட்டணம், பால் விலை, மின்சார கட்டண உயர்தாதவர் கலைஞர்.

153) மாவட்ட தலை நகரங்களில் மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி துவக்கியவர் கலைஞர்.

154) மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தி வழங்கியவர் கலைஞர்..

""இதுல 30% தான் இன்னும் இருக்கு....""

Thursday, 26 January 2017

இந்தித் திணிப்பு எதிர்ப்பு : சுருக்கமான வரலாறு

ஜனவரி இருபத்தி ஐந்து : மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று. மொழிப்போர் எனப்படும் ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் இறுதிக்கட்டத்தை அடைந்த தினம் இன்று . 1937 இல் காங்கிரஸ் அமைச்சரவை அமைக்கப்பட்ட பொழுது ராஜாஜி ஹிந்தி படிப்பதை மேனிலை கல்வியில் கட்டாயம் ஆக்கினார். குழந்தைக்குத் தாய் கட்டாயப்படுத்தித் தான் பாலூட்ட வேண்டும் என்று விளக்கம் தந்தார். ஹிந்தி ரயில் வண்டி அதில் போனால் வேகமாக முன்னேறலாம் என்றும் சொன்னார்.

பெரியார் கொதித்து எழுந்து சுயமரியாதை இயக்கத்தின் மூலமும் , நீதிக்கட்சியின் மூலமும் போராட்டங்கள் நடத்தினார். ஹிந்தி மற்றும் சமஸ்க்ருதத்தைத் தமிழுக்குப் பதிலாகத் திணிக்கப் பார்க்கிறார்கள் என்கிற எண்ணம் வலுப்பெற்றுப் போராட்டங்கள் நடைபெற்றன . பெண்களும் பெருமளவில் கலந்துகொண்டனர் .தீரர் சத்தியமூர்த்தியும் ராதாகிருஷ்ணன் அவர்களும் காங்கிரசிலேயே ஹிந்தி திணிப்பை எதிர்த்தார்கள்; எனினும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார் ராஜாஜி.
இந்திய குடிமக்கள் மீது ஆங்கிலேய அரசு போலவே கிரிமினல் சட்டத்தைத் தாகூர் மற்றும் ஜின்னாவின் எதிர்ப்புகளைக் கண்டுகொள்ளாமலே பயன்படுத்தினார் ராஜாஜி. நடராசன் என்ற இளைஞர் சிறைக்கொடுமையின் காரணமாக 1939 ஜனவரி 15 அன்று உயிர் நீத்தார். அவரையடுத்து திரு. தாளமுத்து என்ற இளைஞரும் சிறைக்கொடுமை தாங்காது 1939 மார்ச் 13ஆம் நாளன்று சிறைச்சாலையிலேயே இயற்கை எய்தினார்.. கூலிக்கு அமர்த்தப்பட்ட அடியாட்கள் என்று இரண்டு
உயிர்கள் போன பின்னும் போராட்டங்களை விமர்சித்தார் ராஜாஜி
பெண்கள் பலர் குழந்தைகளோடு சிறை சென்றனர் ;பெண்களைப் போராட தூண்டியதற்காகப் பெரியார் ஒரு ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு ஆறு மாதத்தில் உடல்நலம் காரணமாக விடுவிக்கப்பட்டார் .தனித்தமிழ் இயக்கம் வளர்ந்ததும் அப்பொழுது தான்
அதற்குப் பிறகு 1939 இல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து விலகக் கவர்னர் மீண்டும் அச்சட்டத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டார் .காங்கிரஸ் விடுதலைக்குப் பிறகு ஆட்சிக்கு வந்ததும் எல்லா மாநில அரசுகளையும் ஹிந்தியை கட்டாயம் ஆக்க சொன்னது. முதலில் தமிழ் பேசும் பகுதியில் இன்னொரு மொழியாகத் தேர்வு செய்துகொண்டு படிக்க வேண்டிய பாடம் என்று பல மொழிகளைக் கொடுத்து அதில் ஹிந்திக்கு மட்டும் ஆசிரியர்களை அதிகமாக நியமித்து ஹிந்தி திணிப்பை மறைமுகமாக ஆரம்பித்தது ஓமந்தூரார் அரசு. பின்னர்க் குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பிள்ளைகள் பெற்றாலே உயர்கல்விக்குத் தகுதி பெறுவர் என்றது இன்னமும் கொதிப்பை அதிகப்படுத்தியது .

பெரியார் போராட்டக்களம் புகுந்தார் ; ம.பொ .சிவஞானம், திருவி.க. முதலியோரும் எதிர்ப்புகளில் கலந்து கொண்டனர் ; ஒரு வழியாக அரசு போராட்டக்காரர்களின் மீதான வழக்குகளைத் திரும்பபெற்றது ;கட்டாயம் என்பது விருப்பப்பாடம் என்றானது
இதற்கு முன்னமே அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும் பொழுது ஹிந்தி தான் தேசிய மொழியாக வேண்டும் என ஒரு குழு விரும்பியது (அதிலேயே சுத்தமான ஹிந்தி ,ஹிந்துஸ்தான் என இரண்டு குழு இருந்தது தனிக்கதை ). அதை எதிர்த்து தென்னக மற்றும் வங்கத்தைச் சேர்ந்த குழு உறுப்பினர்கள் போர்க்கொடி உயர்த்தினர் ; இறுதியில் தேசிய மொழி என்று ஒன்று இல்லாமலேயே, முன்ஷி அய்யங்கார் திட்டப்படி ஆங்கிலம் மற்றும் ஹிந்தி அதிகாரப்பூர்வ மொழிகள் ஆயின ; பதினைந்து வருடங்கள் வரை இதே நிலை தொடரும் என்றும் , ஐந்து ஆண்டுகள் கழித்து எப்படிப் படிப்படியாக ஆங்கிலத்தை விளக்கி ஹிந்தியை தேசிய மொழியாக்குவது எனப் பரிந்துரைகள் தர ஒரு கமிஷன் அமைக்கப்படும் என்றும்
குறிக்கப்பட்டன .

படிப்படியாக அரசு ஹிந்தியை வளர்த்தது ;சட்ட ஆணைகளில் ஹிந்தியை பயன்படுத்தியது . டால்மியாபுரத்தை கல்லக்குடி எனப் பெயர் மாற்றம் செய்யசொல்லி 1953 போராட்டம் நடந்து இரண்டு திமுகத் தொண்டர்கள் உயிர் விட்டார்கள் . அண்ணா, பெரியார் ,முந்தைய ஹிந்தி ஆதரவாளர் ராஜாஜி ஆகியோர் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலமே தொடர வேண்டும் என்று 1956 இல் கையெழுத்திட்டனர்

ஏற்கனவே அரசியலமைப்பில் சொன்னபடி கேர் கமிஷன் அமைக்கப்பட்டது ; ஹிந்தியை எப்படி முழுப்பயன்பாட்டுக்குக் கொண்டுவரலாம் என அது பல்வேறு யோசனைகள் தந்தது . அக்குழுவின் தென்னக மற்றும் வங்க உறுப்பினர்கள் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர் . கோவிந்த் வல்லபாய் பந் தலைமையில் இதை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது .அதுவும் அதையே சொன்னது . பத்தொன்பது வகையான ஹிந்தி மொழிகள் பேசப்பட்டுக்கொண்டு இருந்த சூழலில் 36 கோடி மக்களில் வெறும் இரண்டரை கோடி மக்கள் மட்டும் பேசிய கடீபோலி ஹிந்தியை தென்னகத்துக்கும்
திணித்தார்கள் மக்கள் மீண்டும் போராட எழுந்தார்கள் .

நேரு ,1959 இல் "ஹிந்தி பேசாத மாநில மக்கள் ஆங்கிலத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் ;ஹிந்தி திணிப்பு செய்யப்பட மாட்டாது என்றார் . பந்த் ரெண்டு ஆண்டுகள் போராடி சாதித்தவற்றைப் பிரதமர் இரண்டு நிமிடங்களில் கெடுத்து விட்டார் எனப் புலம்பினார் ". 1959 இல் தந்த உறுதியை நிஜமாக்க நேரு சட்ட வரைவை கொண்டு வர அதில் ஆங்கிலம் தொடரலாம் என்கிற வார்த்தையை, கண்டிப்பாகத் தொடரும் என மாற்றச்சொல்லி கேட்டார்கள் தமிழர்கள் . shall be என்கிற வார்த்தையைப் போட்டுவிட்டு ஆங்கிலத்தை ஆட்சி மொழியாகத் தொடரலாம் என்கிற இடத்தில் may be போட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியது. நேரு தொடரலாம் எனச் சொன்னதைத் தொடராமலும் போகலாம் என வருகிறவர்கள் கொள்வார்கள் எனப் பயந்தார்கள் .
அதுவே நடந்தது, சாஸ்திரி பிரதமர் ஆனதும் 15 வருடகாலக் காலக்கெடு முடிந்தது எனச் சொல்லி கட்டாய ஹிந்தியை அறிமுகப்படுத்தினார் .தமிழகம் கொதித்து எழுந்தது . 70 பேர் அதிகாரப்பூர்வ பதிவுகளின் படி தீக்குளித்துக் கொண்டனர். ஐம்பாதாயிரம் மாணவர்கள் ஊர்வலமாகப் போனார்கள் ; கலவரங்கள் வெடித்தன. பாரா மிலிடரி படைகள் வந்தன. பக்தவச்சலம் முரண்டு பிடித்தார் .ஒ.வி.அழகேசன் மற்றும் சுப்பிரமணியம் ஆகியோர் பதவி விலக அதைச் சாஸ்திரி ஏற்றார் ; பின்னர் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு பிரிய வழி வகுக்காதீர்கள் என்று சொன்னதற்குப் பிறகு ஹிந்தி திணிப்பு நின்றது. அதற்குப் பிறகு தேர்வுகளில் ஆங்கிலமும் இருக்கும் என அறிவித்தார்கள் .

மும்மொழி கொள்கையைக் கொண்டு வந்தார்கள் ; அதை எதிர்த்தும் தமிழகத்தில் போராட ஹிந்தி கற்கிற வாய்ப்புப் பறிபோனது. 1986 இல் நவோதயா பள்ளிகள் தமிழகம் வரும்பொழுது அதை ஹிந்தி திணிப்பு எனக் கலைஞர் எதிர்த்துப் போராட்டம் நடத்த இந்தியாவிலேயே நவோதயா பள்ளிகள் இல்லாத ஒரே மாநிலம் ஆனது தமிழ்நாடு.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இந்திக்கான கால அளவை அதிகப்படுத்துவது, மொரார்ஜி தேசாய் காலத்தில் துணை கமிஷனர் அல்லது அதற்கு மேலான பதவியில் உள்ள ஹிந்தி கற்காத மாநில அதிகாரிகள் கட்டாயம் ஹிந்தி கற்க வேண்டும் என்று உத்தரவு போட்டது,. ராஜீவ் காந்தி காலத்தில் ஹிந்தி வாரம் கொண்டாட வேண்டும் என்று அறிக்கை வந்தது,மத்திய அரசு அதிகாரிகள் ஹிந்தியிலேயே கையெழுத்துப் போடவேண்டும் என்கிற உத்தரவு, என்.சி.ஆர்.டி. புத்தகங்களில் ஹிந்தி திணிப்புக்கு எதிராகப் போராடியவர்களை முட்டாள்கள் என்று சித்தரித்த கேலிச்சித்திரம் இடம் பெற்றது, சமூக வலைதளங்களில் இந்தியில் மட்டுமே இனி அறிவிப்புகள் என்று அறிவித்தது என்று ஹிந்தி திணிப்புத் தொடர்கிறது. ஹிந்தி திணிப்புக்கு எதிரான எதிர்ப்பை ஹிந்திக்கு எதிரான எதிர்ப்பாகவும் பதிவு செய்வதும் தொடர்கிறது.

நன்றி : பூ கொ சரவணன்.