Saturday, 20 February 2016

கலைஞர் ஆட்சி கால சாதனைகள்

என் தலைவர் கலைஞர் அவர்கள்
தமிழகத்திற்கு என்ன செய்தார்?

தெரியாத இளைய
தலைமுறைகளுக்கு இதோ...

----------------------------------------------------------------------------

1) இந்தியாவிலேயே முதன் முதலில்
காவல் துறை ஆணையம்
அமைத்தது கலைஞர்.

2) குடியிருப்பு சட்டம்
அதாவது வாடகை நிர்ணயம் சட்டம்
போன்றவைகளை அமைத்து தந்தது தலைவர் கலைஞர்.

3) இலவச கான்கிரீட்
வீடுகளை ஒதுக்கப்பட்டோரு
க்கு கொடுக்கும் திட்டம் வகுத்தவர்
கலைஞர்.

4) கையில் இழுக்கும் ரிக்
ஷா ஒழித்து இலவச சைக்கில் ரிக்
ஷா தந்தவர் கலைஞர்.

5) பிச்சைகாரர்களுக்கு மறு வாழ்வுமையம்
அமைத்து கொடுத்தவர் கலைஞர்

6) முதலில் இலவச கண் சிகிச்சை முகாம்
அமைத்து கொடுத்தவர் கலைஞர்.

7) குடிநீர் வடிகால் வாரியம்
அமைத்து கொடுத்தவர் கலைஞர்.

8) தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்
அமைத்து தந்தவர் கலைஞர்.

9) 1500பேர் கொண்ட கிராமங்களுக்கும்
சாலை வழித்தடம் அமைத்து தந்தவர்
கலைஞர்.

10) மின்சாரம்
அனைத்து கிராமங்களுக்கும் செல்ல
வழித்தடம் அமைத்து தந்தவர் கலைஞர்.

11.போக்குவரத்தை தேசியமயமாக்கிவர்
கலைஞர்.

12.போக்குவரத்து துறை என்ற
துறையை உருவாக்கியவர் கலைஞர்.

13. பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
தாழ்த்தப்பட்டோருக்கென
துறை அமைத்து தந்தவர் கலைஞர்.

14.அரசியலமைப்பில் பிற்படுத்தப்பட்
டோருக்கான அமைப்பை தந்தவர் கலைஞர்.

15.அரசியலமைப்பில் BC-31% , SC-18% ஆக
உயர்த்தி தந்தவர் கலைஞர்.

16. P.U.C வரை இலவச
கல்வி உருவாக்கி தந்தவர் கலைஞர்.

17. மே 1 சம்பளத்துடன் கூடிய
பொது விடுமுறையாய் அறிவித்தவர்
கலைஞர்.

18. வாழ்ந்த மனிதரான நபிகள்
நாயகத்தின் பிறந்த
நாளை விடுமுறை தினமாக
அறிவித்தவர் கலைஞர்.

19.முதல் விவசாயக்
கல்லூரியை உருவாக்கி தந்தவர்
கலைஞர்.(கோவை)

20. அரசு ஊழியர்கள் குடும்ப நலதிட்டம்
தந்தவர் கலைஞர்.

21. அரசு ஊழியர்களுக்கு மேலான
ரகசிய அறிக்கை முறையை ஒழித்தவர்
கலைஞர்.

22. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும்
திட்டம் தந்தவர் கலைஞர்.

23. கோயில்களில் குழந்தைகளுக்கான
கருணை இல்லம் தந்தவர் கலைஞர்.

24. சேலம்
இரும்பு தொழிற்சாலை அமைத்து தந்தவர்
கலைஞர்.

25. நில
விற்பனை வரையரை சட்டத்தை அமைத்தவர்
கலைஞர்.

26.இரண்டாம் அலகு நிலக்கரி மின்
உற்பத்தி நெய்வேலிக்கு கொண்டுவந்தவர்
கலைஞர்.

27.பெட்ரோல் மற்றும் ரசாயன
தொழிற்சாலையை தூத்துகுடிக்கு கொண்டுவந்தவர்
கலைஞர்.

28. SIDCO உருவாக்கியது கலைஞர்.

29. SIPCOT உருவாக்கியது கலைஞர்.

30.உருது பேசும்
இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டோரில்
தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தவர்
கலைஞர்.

31.பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம்
கொண்டுவந்தவர் கலைஞர்.

32. மனு நீதி திட்டம் தந்தவர் கலைஞர்.

33. பூம்புகார் கப்பல்
நிறுவனத்தை தந்தவர் கலைஞர்.

34. பசுமை புரட்சி திட்டத்தை தந்தவர்
கலைஞர்.

35. கொங்கு வேளாளர்
இனத்தை பிற்படுத்தப்பட்டோரில்
இணைத்தவர் கலைஞர்.

36. மிக பிற்படுத்தப்பட்டோரில் வன்னியர்
சீர் மரபினரை சேர்த்தவர் கலைஞர்.

37. மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20%
தனி இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.

38. தாழ்த்தப்பட்டோருக்கு 18% தனி இட
ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.

39. பழங்குடியினருக்கு 1% தனி இட
ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.

40. மிக பிற்படுத்தப்பட்டோருக்கு இலவச
கல்வி தந்தவர் கலைஞர்.

41. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச
கல்வி இளகலை பட்டப்படிப்பு வரை தந்தவர்
கலைஞர்.

42. தாழ்த்தப்பட்டோர்களுக்கு இலவச
கல்வி தந்தவர் கலைஞர்.

43. இந்தியாவிலேயே முதன் முறையாக
விவசாயத்திற்கு இலவச மின்சாரம்
தந்தவர் கலைஞர்.

44. சொத்தில் பெண்ணுக்கும் சம
உரிமை உள்ளது என
சட்டமாக்கியது கலைஞர்.

45. அரசு வேலைவாய்ப்புகளில்
பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு தந்தவர்
கலைஞர்.

46. ஆசியாவிலே முதன் முறையாக
கால்நடை மற்றும் விலங்குகள்
அறிவியல் பல்கலைகழகம் அமைத்தவர்
கலைஞர்.

47. ஏழை பெண்களுக்கு திருமண
நிதி உதவி திட்டம் தந்தவர் கலைஞர்.

48. விதவை பெண்கள் மறுமண
நிதி உதவி திட்டம் தந்தவர் கலைஞர்.

49. நேரடி நெல் கொள்முதல் மையம்
அமைத்து தந்தவர் கலைஞர்.

50. நெல் கொள்முதலில்
ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம்
செய்தவர் கலைஞர்.

51. தமிழ்நாடு நுகர் பொருள்
வாணிபக்கழகத்தை அமைத்தவர்
கலைஞர்.

52.கர்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டத்தை தந்தவர்
கலைஞர்.

53. பெண்கள் சுய
உதவிகுழுக்களை அமைத்து தந்தவர்
கலைஞர்.

54. மனோன்மணியம் சுந்தரனார்
பல்கலைகழகத்தை நிறுவியவர் கலைஞர்.

55. பாவேந்தர் பாரதிதாசன்
பல்கலைகழகத்தை நிறுவியவர் கலைஞர்.

56. டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ
கல்லூரியை நிறுவியவர் கலைஞர்.

57. முதன் முதலில் காவிரி நீதிமன்றம்
அமைக்க முற்பட்டவர் கலைஞர்.

58. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல்
கொண்டு வந்தவர் கலைஞர்.

59. உள்ளாட்சி பதவிகளில் 33%
பெண்களுக்கு இட ஒதுக்கீடு தந்தவர்
கலைஞர்.

60. இரு பெண் மேயரில் ஒருவர்
தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர
செய்தவர் கலைஞர்.

61. மெட்ராஸ் கலைஞர்.

62. முதல் முறையாக
விதவை பெண்களுக்கும் பொறியியல்
மற்றும் மருத்துவ கல்லூரியில்
இடமளிக்க வழிவகை செய்தது கலைஞர்.

63. தொழிற்சாலைகளுக்கான
வெளிப்படை கொள்கை அமைத்து தந்தவர்
கலைஞர்.

64. முதல் முறையாக விதவை பெண்கள்
தொழில் தொடங்க உதவியவர் கலைஞர்.

65. கிராமங்களில் கான்கீரிட்
சாலை அமைத்து தந்தவர் கலைஞர்.

66. 24 மணி நேரமும் மருத்துவ
சேவை தந்தவர் கலைஞர்.

67. தொழில்முறை கல்வியில் கிராமபுற
மாணவர்களுக்கு 15% இட
ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.

68. சமத்துவபுரம் தந்தவர் கலைஞர்.

69. கிராமங்களில் மினி-பஸ்
சேவையை கொண்டு வந்தவர் கலைஞர்.

70. இந்தியாவிலேயே முதன் முறையாக
டாக்டர் அம்பேத்கார் பெயரில் சட்ட
கல்லூரியை நிறுவியவர் கலைஞர்.

71. பெரியார் பல்கலைகழகம் நிறுவியவர்
கலைஞர்.

72. உலக தமிழர்களுக்கு உதவ தமிழ்
மெய்நிகர் பல்கலைகழகத்தை தந்தவர்
கலைஞர்.

73. உருது அக்காடமி தந்தவர் கலைஞர்.

74. சிறுபான்மையினர் பொருளாதார
வளர்ச்சி அமைப்பை ஏற்படுத்தியவர்
கலைஞர்.

75. உழவர்சந்தை திட்டத்தை தந்தவர்
கலைஞர்.

76. வருமுன் காப்போம் திட்டத்தை தந்தவர்
கலைஞர்.

77.கால்நடை பாதுகாப்பு திட்டத்தை தந்தவர்
கலைஞர்.

78. 133 அடி திருவள்ளுவர்
சிலை கன்னியாகுமாரியில் வைத்தவர்
கலைஞர்.

79. டைடல் பார்க் சென்னையில்
அமைத்தவர் கலைஞர்.

80. வீட்டுமனை வழங்கும்
திட்டத்தை தந்தவர் கலைஞர்.

81. மாவட்ட,மாநில அளவில் முதல்
மூன்று இடங்களில்
வருவோருக்கு மேற்படிப்பு உதவி தொகை தந்தவர்
கலைஞர்.

82. ஆசியாவிலேயே மிக பெரிய
பேருந்து நிலையம்
சென்னை கோயம்பேடு நிலையம்
அமைத்து தந்தவர் கலைஞர்.

83. விவசாய
கூலி வேலை செய்வோர்களுக்கு
நலவாரியம் அமைத்து தந்தவர் கலைஞர்.

84. பொது கூலிவேலை செய்வோர்
நலவாரியம் அமைத்து தந்தவர் கலைஞர்.

85. அறிஞர்களுக்கும்,தியாகிகளுக்கும்
மணிமண்டபம் கட்டிதந்தவர் கலைஞர்.

86. 20 அணைகள் கட்டி தந்தவர் கலைஞர்.

87. பள்ளிகளில்
உணவோடு முட்டை தந்தவர் கலைஞர்.

88. மதுரை நீதிமன்றம் கட்டி தந்தவர்
கலைஞர்.

89. இலவச பஸ் பாஸ் தந்தவர் கலைஞர்.

90.அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை தந்தவர்
கலைஞர்.

91. நமக்கு நாமே திட்டத்தை தந்தவர்
கலைஞர்.

92. நலிவுற்ற குடும்பநல
திட்டத்தை தந்தவர் கலைஞர்.

93. 9 மாவட்டங்களில் புதிய
மாவட்டாச்சியர்
அலுவலகங்களை கட்டி தந்தவர் கலைஞர்.

94. 104 கோடி ரூபாயில்
சென்னை பொது மருத்துவமணை புதிய
கட்டிடம் தந்தவர் கலைஞர்.

95. 13000 மக்கள் நலப்பணியாளர்கள்
நியமனம் செய்தவர் கலைஞர்.

96. முதல் முறையாக 10000
சாலை பணியாளர்களை நியமனம்
செய்தவர் கலைஞர்.

97. சென்னையில்
போக்குவறத்து நெரிசலை தவிர்க்க 9
மேம்பாலங்களை கட்டி தந்தவர் கலைஞர்.

98. ரூ.1500 கோடியில் 350
துணை மின்நிலையங்களை உருவாக்கியவர்
கலைஞர்.

99. ஒப்பந்த பணியாளர்களுக்கு
ஓய்வூதிய திட்டத்தை தந்தவர் கலைஞர்.

100.போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய
திட்டத்தை தந்தவர் கலைஞர்.

101. வேலூர்,தூத்துகுடி,கன்னியாகுமரியில் புதிய மருத்துவ
கல்லூரிகளை அமைத்து தந்தவர்
கலைஞர்.
102. ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்.
திட்டத்தை தந்தவர் கலைஞர்.

103. பொது விநியோக திட்டத்தின் மூலம்
சமையல் எண்ணை மற்றும் பல
வீட்டு பொருட்க்கள் நியாயவிலையில்
தந்தவர் கலைஞர்.

104: free professional education (engg,medical,l
aw,...) For first generation graduates : Plan
implemented by @kalaignar89 @pugalmani55

104. நியாயவிலைக்டையில் 10 சமையல்
பொருட்க்களை ரூ.50 க்கு தந்தவர் கலைஞர்.

105. விவசாய கடன் 7000
கோடியை தள்ளுபடி செய்யவைத்தவர்
கலைஞர்.

106. சரியான நேரத்தில்
வங்கி கடனை திருப்பி செலுத்தும்
விவசாயிகளுக்கு வட்டி இல்லை என்றவர்
கலைஞர்.

107. மேம்படுத்தப்பட்ட நெல் கொள்முதல்
விலை ரூ.1050 ஆக உயர்த்தியவர்
கலைஞர்.

108. வகைப்படுத்தப்பட்ட நெல் கொள்முதல்
விலை ரூ.1100 ஆக உயர்த்தியவர்
கலைஞர்.

109. 172 உழவர் சந்தைகளாக
உயர்த்தியவர் கலைஞர்.

110. ஒரு டன் கரும்பின் கொள்முதல்
விலை ரூ.2000 ஆக உயர்த்தியவர்
கலைஞர்.

111. மாவட்டத்திற்குள் நதிநீர்
இணைப்பு திட்டம் தந்தவர் கலைஞர்.

112. ரூ.189 கோடி செலவில் காவிரி-
குண்டூர் நதிநீர் இணைப்பு திட்டம்
தந்தவர் கலைஞர்.

113. ரூ.369 கோடி செலவில் தாமிரபரணி-
கருமேனியாரு-நம்பியாரு நதிநீர்
இணைப்பு திட்டம் தந்தவர் கலைஞர்.

114. காமராஜர் பிறந்த
நாளை கல்வி மேம்பாட்டு தினமாக
அறிவித்தவர் கலைஞர்.

115. பொது நுழைவுத்
தேர்வை ரத்து செய்தவர் கலைஞர்.

116. 10 ம் வகுப்பு வரை தமிழ்
கட்டாயபாடமாக்கியது கலைஞர்.

117. 623 கோடி செலவில் 5824 கோவில்கள்
புனரமைத்து கும்பாபிஷேகம்
பணி செய்தவர் கலைஞர்.

118. அர்ச்சகர்கள்,பூசாரிகளுக்கு இலவச
சைக்கிள் வழங்கியவர்
.
119. ரூ.2 லட்சம் மதிப்புள்ள இலவச
மருத்துவ காப்பீடு திட்டம் தந்தவர்
கலைஞர்.

120. இதயநோய்,சர்க்கரை நோய்,புற்று நோய்க்கான நலமான
தமிழகம் திட்டம் தந்தவர் கலைஞர்.

121. மத்திய அரசோடு இணைந்து 108
ஆம்புலன்ஸ் சேவையை தந்தவர்
கலைஞர்.

122. 25 புரிந்துணர்வு ஒப்பந்தம்
கையெழுத்தாகி 37 புதிய
நிறுவனங்களை வர செய்து 41,090
கோடி முதலீடை கொண்டுவந்தவர்
கலைஞர்.

123. 37 நிறுவன அனுமதியால் 3 லட்சம்
பேர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தந்தவர்
கலைஞர்.

124. 5 லட்சம்
இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு தந்தவர்
கலைஞர்.

125. புதிய டைடல் பார்க்
திருச்சி,கோவை,மதுரை,திருநெல்வே
லியில் உருவாக்கியவர்
.
126. அனைத்து கிராம
முறுமலர்ச்சி திட்டம் தந்தவர் கலைஞர்.

127. பேருந்து கட்டணம் ஏற்றாமல் 13000
புதிய பேருந்துகளை தந்தவர் கலைஞர்.

128. அருந்ததியினர் இனத்திற்கு 3%
தனி இடஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.

129.அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளோடு 10,096
கிராம பஞ்சாயத்தை உருவாக்கியவர்
கலைஞர்.

130. 420 பேரூராட்சிகள்
உருவாக்கி அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம்
தந்தவர் கலைஞர்.

131. அனைத்து இனத்தினரும் அர்ச்சகர்
ஆகும் உரிமையை பெற்று தந்தவர்
கலைஞர்.

132. உலக தரம் வாய்ந்த
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை நிறுவியவர்
கலைஞர்.

133.ஆசியாவையே திரும்பி பார்க்கவைத்த
புதிய சட்டமன்றம் நிறுவியவர் கலைஞர்.

134. அடையார் சூழியல்
ஆராய்ச்சி பூங்கா அமைத்தவர் கலைஞர்.

135.சென்னை செம்மொழி பூங்கா அமைத்து தந்தவர்
கலைஞர்.

136. கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம்
தந்தவர் கலைஞர்.

137. ஜப்பான்
நாட்டு வங்கி உதவியோடு மெட்ரோ ரயில்
திட்டம் தந்தவர் கலைஞர்.

138. ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்
தந்தவர் கலைஞர்.

139. ராமநாதபுரம்-பரம
க்குடி கூட்டு குடிநீர் திட்டம் தந்தவர்
கலைஞர்.

140. கலைஞர் வீடு திட்டம் தந்தவர்
கலைஞர்.

141. முதல் உலக தமிழ்
செம்மொழி மாநாடு நடத்தியவர் கலைஞர்.

142.தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர்
கலைஞர்.

143. 119 புதிய
நீதிமன்றங்களை உருவாக்கியவர்
கலைஞர்.

144. மாலை நேரம் மற்றும்
விடுமுறை தின
நீதிமன்றங்களை உருவாக்கி தந்தவர்
கலைஞர்.

145. அண்ணா தொழில்நுட்ப
பல்கலைகழகம் திருச்சி,கோவை,ம
துரை,திருநெல்வேலியில்
உருவாக்கி தந்தவர் கலைஞர்.

146. தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய
ஆணையம் அமைத்து தந்தவர் கலைஞர்.

147. சமச்சீர் கல்வி தந்தவர் கலைஞர்.

148. இலவச வண்ண
தொலைக்காட்சி பெட்டி வழங்கும் திட்டம்
தந்தவர் கலைஞர்.

149. முதல்
பட்டதாரிக்கு ஆண்டுக்கு 20,000 வீதம் 4
ஆண்டுகளுக்கு 80,000 பொறியியல்
கல்வி கட்டணம் வழங்கியவர் கலைஞர்.

150. இஸ்லாமியர்களுக்கு 3.5% தனி இட
ஒதுக்கீடு வழங்கியவர்
.
151. இலவச
எரிவாயு உருளை வழங்கியவர் கலைஞர்.

152. பேருந்து,பால்,மின்சார
கட்டணங்களை உயர்த்தாதவர் கலைஞர்.
# ஏன் என்றால் அது ஏழை,நடுத்தரவர்க்கங்களின் அவசிய பயன்பாடு.

153. மாவட்ட தலைநகரங்களில் மருத்துவ
கல்லூரி,பொறியியல்
கல்லூரி துவக்கியவர் கலைஞர்.

இப்படி இன்னும் பல கலைஞர் வகுத்த
மக்கள் நலத் திட்டங்கள் அதிகம்
இருக்கிறது நண்பர்களே #தமிழக
மக்களின் நலமே கலைஞரின் நலம். !!

Wednesday, 16 December 2015

பெரியார் நெஞ்சில் தைத்த முள்

திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரான கலைஞர் கருணாநிதி அவர்கள் கொண்டுவந்த வரலாற்றுச்சிறப்புவாய்ந்த ஒரு அரசாணையை தற்போது உச்சநீதிமன்றம் ரத்து செய்திருப்பதைக் கண்டு தமிழகத்தின் பெரும்பாலான ஆட்கள் எதிர்ப்புத்தெரிவிப்பதையும் சிலர் உள்ளுக்குள் மகிழ்வதையும் புரிந்துகொள்ளமுடிகிறது.

கலைஞரின் அரசாணை என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்வோம். அதற்கு முன்னால் நம்முடைய கோயில் வழிபாட்டு முறையை பார்ப்போம். "பெரிய " கடவுள்களான விஷ்ணு,  சிவன்,  முருகன்,  விநாயகர் போன்ற கடவுள்களின் சந்நிதிகளில் பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகராக இருப்பது அனைவருக்கும் தெரியும். அதாவது கோயில் கருவறையினுள் நுழைகிற உரிமை அவர்களுக்கு மட்டுமே உண்டு. "லோக்கல் " சாமிகளான மாரியாத்தா,  செல்லாத்தா,  முனிசுவரன்,  அய்யனார்,  சுடலைமாடசாமி போன்ற சாமிகளுக்கு பிராமணர் அல்லாத பிற சாதியினர் பூஜை செய்வார்கள்.  இதுதான் இங்கே நடைமுறை. இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் திருப்பதி வெங்கடாசலபதி கோயில் அர்ச்சகர் ஒருவேளை அய்யனாருக்கு தான் பூஜை செய்ய விரும்பினால் அவருக்கு அந்த உரிமை உண்டு. அவர் அதை செய்ய முடியும். ஆனால் முனிசுவரனுக்கு பூஜை செய்கிற பூஜாரி (அவர் அர்ச்சகர் இவர் பூஜாரி - இந்த வித்தியாசம் முக்கியம்)  வெங்கடாசலபதி க்கு பூஜை செய்ய விரும்பினால் அது நடக்காது. அவருக்கு அந்த உரிமையில்லை.

கலைஞர் கருணாநிதி இந்த விசயத்தில் பிராமணர்கள் மட்டுமல்ல அனைத்து சாதியினரும் அர்ச்சகராக இயலும் என்று ஒரு அரசாணையை பிறப்பிக்கிறார். "கருணாநிதிக்கு ஏன் புத்தி இப்படி போகிறது?  பிராமணர்களுக்குத்தானே எல்லா மந்திரங்களும் தெரியும்?  மற்ற சாதியினர் போனால் என்ன செய்வார்கள்? " என்று உங்களுக்கு தோன்றலாம். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்றால் யாரெல்லாம் விரும்புகிறார்களோ அவர்கள் அனைவருக்கும் அந்த பொறுப்பு வழங்கப்படும் என்பதல்ல. ஒருத்தருக்கு உண்மையிலேயே மிக அதிகமான கடவுள் பக்தி இருக்கிறது,  அவரால் அர்ச்சகர் ஆக முடியுமா என்றால் முடியாது. கோயில் கருவறைகளில் கடவுளுக்கு ஓதப்படும் மந்திரங்களை ஒருத்தர் (எந்த சாதியினராக வேண்டுமானாலும் இருக்கலாம்)  முறையாக கற்க வேண்டும். அவர்களை அரசாங்கம் முறையாக கண்காணிக்கும். அவர்களுக்கு பயிற்சி தருகிறவர் இன்னார் முழுப்பயிற்சி பெற்று அர்ச்சகராவதற்கு தகுதி பெற்றுவிட்டார் என்று சான்று அளிக்கப்பட்ட பிறகே தான் அவரால் அர்ச்சகராக முடியும். எப்படி ஒரு கிறித்தவர் பாதிரியாராக வேண்டுமென்றால் அதற்கான முறைப்படி படித்து பயிற்சி பெற்று ஆகிறாரோ அதே போலத்தான்.  ஆக ஒரு பிராமணருக்கு என்ன்ன்ன மந்திரங்கள் தெரியுமோ அது இவருக்கும் தெரியும். ஒரேயொரு வித்தியாசம் அவருக்கு பூணூல் இருக்கும் இவருக்கு இருக்காது அவ்வளவு தான்.

இதை எதிர்த்து பிராமண அர்ச்சகர்கள் சார்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பையும் வழங்கியிருக்கிறது. நீதிமன்றம் ஆகம விதிகளுக்கு உட்பட்டு கோயில்கள் இயங்கலாம் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆகம விதி என்றால் என்னவென்று குழம்பவேண்டாம்,  வழக்கம்போல பெரிய கடவுள்களின் கருவறைகளில் பிராமணர்கள் தான் நுழைய இயலும், மற்றவர்கள் நுழைந்தால் தீட்டு பட்டுவிடும்  என்பதே அந்த விதி. அவரும் மனிதர் இவரும் மனிதர்,  அவருக்கு தெரிந்த எல்லா மந்திரங்களும் இவருக்கும் தெரியும். ரெண்டு பேருமே மிகுந்த கடவுள் பக்தி உடையவர்கள். குளித்துவிட்டு சுத்தபத்தமாகத்தான் ரெண்டு பேருமே பூஜை செய்ய போகிறார்கள். அப்படியிருக்க அவர் நுழைந்தால் கடவுள் ஏற்றுக்கொள்வார் இவர் போனால் தீட்டாக்கி விடுவார் என்றால் எப்படி ஏற்றுக்கொள்வது என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அதுதான் ஆகம விதி.

கடவுள் நம்பிக்கை இல்லாத கருணாநிதி எதற்காக இந்த அரசாணையை வெளியிடவேண்டும்?  எந்த சாதியினர் அர்ச்சனை செய்தால் அவருக்கென்ன வந்தது என்று கேட்கலாம். கருணாநிதிக்கு உண்மையிலேயே எல்லா சாதியினரும் அர்ச்சனை செய்யவேண்டுமென்ற ஆசையெல்லாம் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் எந்த சாதியை பல நூற்றண்டுகாலமாக சாதியின் பெயரல் தீட்டு தீட்டு என்று சொல்லி கோயிலுக்கு உள்ளே கூட நுழைய முடியாமல்  மறுக்கப்பட்டர்களோ,  அந்த தலித் மக்களை பிராமணர்களுக்கு இணையாக,  கோவிலுக்குள் என்ன கருவறையிலேயே  நுழைவதை காண அவர் விரும்பினார். ஆனால் ஆதி திராவிடர்களும் அர்ச்சகராகலாம் என்று அவரால் சட்டம் போட முடியாது. அதனால் தான் அனைத்து சாதியினரும் ஆகலாம் என்ற சட்டத்தை இயற்றுகிறார். திராவிட பஜகோவிந்தமான கருணாநிதியின் லீலைக ளை நிஜ பஜகோவிந்தங்களால் புரிந்துகொள்ள முடியாதா என்ன?  ஒரு தலித் தங்களுக்கு இணையாக கோயில் கருவறையில் நுழைவதை அவர்களால் பொறுக்கமுடியவில்லை. எனவே தங்களது பஜகோவிந்த தனத்தின் மூலமாக அதை முறியடித்துள்ளார்கள். திராவிட பஜகோவிந்தமான கருணாநிதி இதை முறியடித்து மீண்டும் கொண்டுவரவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.

Friday, 20 November 2015

திராவிட இயக்க நூற்றாண்டு நினைவலைகள்

இன்று நீதிக்கட்சியின் நூற்றாண்டு விழா ஆரம்பம்... "தென்னிதிய நல உரிமை சங்கம்" என்று துவங்கப்பட்டு, நடேச முதலியார், பிட்டி தியாகராய செட்டியார் மற்றும் T.M. நாயர் ஆகிய மும்மூர்த்திகளால் வழிநடத்தபட்டு "ஜஸ்டிஸ் பார்டி - நீதி கட்சி" என்று 1916 முதல் செயல்பட்டது... 

அன்றைய சென்னை மாகாணத்தில் (திருவிதாங்கூர், மைசூர், புதுக்கோட்டை சமஸ்தானங்கள் மற்றும் ஹைதராபாத் நிஜாம் பகுதிகள் நீங்கலான முழு தெனிந்தியா) ஆட்சியை பிடித்து,  ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மற்றவர்களை அடிமைகளாக நடத்திக்கொண்டிருந்த நிலையை மாற்றி எல்லா மக்களும் நலமுடன் வாழ்ந்திட வழிவகுத்த வகுப்புவாரி பிரதிநிதித்துவ சட்டம், கோவில் பணத்தை கொள்ளை போவதிலிருந்து காத்த அறநிலைய சட்டம், ஆங்கில மருத்துவக்கல்விக்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை நீக்கியது போன்ற எண்ணற்ற பல முற்போக்கு நடவடிக்கைகளை எடுத்தது..

நீதி கட்சியின் (ஜஸ்டிஸ் பார்டி) சாதனைகள்...

நீதிக்கட்சித் தலைவர் சர். பிட்டி. தியாகராயர், சென்னை மாநகர மேயராக இருந்தபோதுதான் முதன் முதலாக பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது, கட்டாய ஆரம்பக் கல்வியும், பார்வையற்றோர் பள்ளியும், பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லமும் உருவாக்கப்பட்டது.

1921 ஆம் ஆண்டு முதன்முதலாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிட சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது நீதிக்கட்சி அரசு. 1922 ஆம் ஆண்டு வேலை வாய்ப்பில் மட்டுமின்றி பதவி உயர்விலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை இடஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டுமென நீதிக்கட்சி அரசு ஆணை பிறப்பித்தது.

ஒவ்வொரு அரசுத் துறையிலும் அந்தந்த துறைகள் மூலமாகவே வேலைக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். இதைப் பயன்படுத்தி ஏராளமான வேலைகளுக்கு பார்ப்பனர்களே நியமிக்கப்பட்டு வந்தார்கள். இதை மாற்றிட நீதிக்கட்சித் தலைவர் டாக்டர் சி.நடேசனார் அயராது உழைத்தார். அதன் விளைவாக 1922 ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியில் “ஸ்டாப் செலக்ஷன் போர்டு” ஏற்படுத்தப்பட்டது.

மருத்துவ பட்டப் படிப்பில் சேர சமஸ்கிருதம் கட்டாயம் தெரிய வேண்டும் என்று இருந்த நிலையை மாற்றியது நீதிகட்சி அரசு. ஆதி திராவிடர், தாழ்த்தப்பட்டோர் பொதுத் தெருவிலும் எல்லாத் தெருவிலும் நடந்து போகலாம் என்று முதன்முதலில் அதற்காகவே தனியாக ஒரு ஆணை பிறப்பித்தது நீதிக்கட்சி அரசு.

கோயில்களின் வருமானத்தை குடும்பத்தோடு கொள்ளை அடித்து வந்த பார்ப்பனக் கொள்ளையை முறியடிக்க இந்துக் கோயில்களை வரைமுறைப் படுத்த இந்து அறநிலையத் துறையை உருவாக்கியது நீதிக்கட்சி அரசு.

ஒரு சாதியின் ஆதிக்கத்தில் இருந்து கோயில் சொத்துக்களை காப்பாற்ற இந்து அற நிலையத் துறையை உருவாக்கியது நீதிக்கட்சி அரசு. பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்புக்கிடையே நீதிக் கட்சியின் முதலமைச்சர் பனகல் அரசர் பெரும் முயற்சி எடுத்து 1925 இல் இத்துறையை உருவாக்கினார்.

இந்தியாவிலேயே தாழ்த்தப்பட்டோருக்காக தனியாக அமைச்சகத்தை முதன்முதலில் அமைத்தது பனகல் அரசர் தலைமையிலான நீதிக்கட்சி அரசு.

ஒரத்த நாடு, ராஜமாடம் போன்ற இடங்களில் இருந்த தர்மச் சத்திரங்களில் பார்ப்பனர்களுக்கு மட்டுமே சாப்பாடு என்ற முறையை மாற்றியவர் தஞ்சை மாவட்ட மன்றத் தலைவராக இருந்த நீதிக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சர் ஏ.டி.பன்னீர் செல்வம்.

1935 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பேருந்துகளில் “பஞ்சமருக்கு இடமில்லை” என்று எழுதியதோடு டிக்கெட்டுகளிலும் அவ்வாறே அச்சிட்டு இருந்தனர். நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரும் இராமநாத புரம் மாவட்ட ஆட்சிக் குழுத் தலைவருமான டபுள்யூ.பி.ஏ. சவுந்தரபாண்டியன் அதை ஒழித்தார்.

நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரும் அறங்காவல் குழு தாலுகா போர்டு தலைவருமான எ.ஸ்.ராமச்சந்திரன் சேர்வை தனது பதவிக் காலத்தில் “இனி இந்தக் கையால் ஒரு பார்ப்பனருக்குக்கூட வேலை கொடுக்க மாட்டேன்” என்று பகிரங்கமாக மேடையிலேயே அறிவித்தார்.

குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களை கோவில்களுக்கு பொட்டுக்கட்டி தேவதாசிகளாக மாற்றும் முறையை ஒழிக்க தேவதாசி ஒழிப்பு மசோதாவை கொண்டு வந்து அம்முறையை முற்றிலும் ஒழித்தது நீதிக்கட்சி அரசு. தேவதாசி ஒழிப்பு மசோதாவை கொண்டுவந்து, அதை சத்தியமூர்த்தி அய்யர் போன்ற பெரிய பார்ப்பனத் தலைவர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி சட்டமாக மாற்ற பெரும்பாடுபட்டவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.

தேவதாசி மசோதா வந்தபோது சட்டத்தை மீறினாலும் மீறுவேனே தவிர சாஸ்திரத்தை மீற மாட்டேன் என்று கூறிய அந்த மசோதாவை எதிர்த்து தேவதாசி முறையை ஆதரித்துப் பேசினார் சத்தியமூர்த்தி அய்யர். “தேவதாசி முறை நீடிக்க வேண்டுமென அய்யர் விரும்பினால் இனிமேல் அவர் இனத்துப் பெண்கள் அதைச் செய்யட்டும்” என்று தந்தை பெரியாரின் கருத்தை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பதிலடியாக கொடுத்தப் பிறகு சத்தியமூர்த்தி அய்யர் வாயை மூடினார்.

கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களைச் சேர்க்க குழுக்களை நியமித்தது நீதிக்கட்சி அரசு.

தனியார் பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட மாணவர் களை சேர்க்கும் வகையில் சட்டம் இயற்றியது நீதிக்கட்சி அரசு.
தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கென தனியாக இருந்த பள்ளிகளை மூடி பிற சாதி மாணவர்களுடன் சேர்ந்து பயில வழி வகுத்தது நீதிக்கட்சி அரசு.

தாழ்த்தப்பட்ட மாணவர்களை சேர்த்துக் கொள்ளாத பள்ளிகளுக்கு அரசு நிதி உதவி தரப்பட மாட்டாது என அறிவித்தது நீதிக்கட்சி அரசு.

தாழ்த்தப்பட்டவர்கள் வீடு கட்டிக் கொள்ள புறம்போக்கு நிலங்களை அளித்தது நீதிக்கட்சி அரசு.

கிறிஸ்துவரை கல்லூரி முதல்வர், சட்டமன்றத் தலைவர், பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தலைவர், உயர்நீதிமன்ற நீதிபதி, உள்துறை உறுப்பினர் போன்ற பதவிகளில் அமர்த்தியது நீதிக்கட்சி அரசு.

மதுரை மங்கம்மாள் சத்திரத்தில் பார்ப்பனர்களுக்கு என்று தனியாக அறைகள் ஒதுக்கப்பட் டிருந்த முறையை ஒழித்தது நீதிக்கட்சி அரசு.

மாவட்ட நீதிபதிகள் நியமனங்களை சென்னை உயர்நீதிமன்றத்தின் பிடியிலிருந்து விடுவித்தது நீதிக்கட்சி அரசு.

அண்ணாமலை பல்கலைக்கழகம், ஆந்திர பல்கலைக்கழகம் ஆகியவற்றை உருவாக்கியது நீதிக்கட்சி அரசு.

துப்புரவு வகுப்பினர், தோடர்கள், கோடர்கள், படகர்கள் ஆகியோருக்கு கூட்டுறவுச் சங்கங்களை நீதிக்கட்சி அரசு ஏற்படுத்தியது.

தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்குப் பணி உயர்வு, உயர் பதவி நியமனங்கள் நீதிக்கட்சி அரசால் செய்யப்பட்டது.
தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றங் கருதி தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டதோடு அவர்கள் மேலும் முன்னேற  அதிகாரிகளை லேபர் கமிஷனர்களாக நியமித்தது நீதிக்கட்சி அரசு.

கோவை மாவட்டத்திலுள்ள குறவர், வலையர் ஆகியோரை குற்றப் பரம்பரையில் இருந்து மீட்க சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட துடன் அவர்களின் குழந்தைகளுக்கு ஸ்காலர்ஷிப்புகளை அளித்தது நீதிக்கட்சி அரசு.

ஆதி திராவிடர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டு அதனைப் பயன்படுத்த மூலதனம், பிறசாதியினரிட மிருந்து பாதுகாப்பு, அடமானம் வைக்காமல் இருக்க அறிவுரை இன்னும் பிற தொல்லைகளிலிருந்து மீட்பு என பலவித உதவிகளையும் நீதிக்கட்சி அரசு செய்தது.

ஆதி திராவிடர்களுக்கு விவசாயத்திற்காக நிலங் களை ஒதுக்குகிறபோது, மரங்களின் மதிப்பு அளவு கட்டணத்தை தள்ளுபடி செய்தது நீதிக்கட்சி அரசு.

நிலத்தில் கட்டிடத்தைக் கட்டிக் கொண்டு நில வாடகை செலுத்துவோருக்கு வாடகைதாரர் குடியிருப்புச் சட்டத்தை நீதிக்கட்சி அரசு கொண்டு வந்தது. இச்சட்டப்படி நில உரிமையாளர்களால் அப்புறப்படுத்தப்படுவோம் என்னும் பயம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீங்கியது.

கள்ளர் சமுதாய முன்னேற்றத்திற்காக தனியாக லேபர் கமிஷன் நியமிக்கப்பட்டு, அவர் சில வழி முறைகளை உருவாக்கித் தர ஏற்பாடு செய்யப்பட் டது. தஞ்சை கள்ளர் மகா சங்கத்தின் வேண்டு கோளை ஏற்று ஐந்து பள்ளிகளை தஞ்சை வட்டாரத் தில் திறக்க நீதிக்கட்சி அரசு உ.த்தரவிட்டது.

அரசுப் பள்ளிகளில் வகுப்புரிமை – இட ஒதுக்கீடு நிலைநாட்டப்பட, ஆண்டுதோறும் பொதுப் பணித்துறை அறிக்கை வெளியிட வேண்டுமென நீதிக்கட்சி அரசு அறிவித்தது.

கல்லூரித் தலைவர்களே மாணவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்த முறைக்கு நீதிக்கட்சி அரசு தடை விதித்து, ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர்களைச் சேர்க்க குழுக்கள் அமைக்கப் பட்டன.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் பொதுப் பாதைகள், பொது இடங்கள், கிணறு, குளம் போன்றவைகளை உபயோகிப்பதை தடுப்பவர்களுக்கு நீதிக்கட்சி அரசு அபராதம் விதித்து ஆணை பிறப்பித்தது.

தலைமைச் செயலகம் பார்ப்பனர்களின் ஏகபோக சொத்தாக இருந்ததை புள்ளி விவரங்களோடு சட்டமன்றத்தில் வெளிப்படுத்தி, “தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் பார்ப்பனர்களுக்கும் திராவிடர்களுக்கும் ஓரளவிற்காவது சமநிலை உண்டாக அடுத்த மூன்று ஆண்டுகள் பார்ப்பன ரல்லாத சமூகத்தினர் மட்டுமே உத்தியோகங்களுக்கு நியமிக்கப்பட வேண்டும்” என்று தீர்மானம் கொண்டு வந்து, அத்தீர்மானம் நிறைவேற டாக்டர் சி.நடேசனார் முன்னின்றார்.

“பார்ப்பனரல்லாதாருக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய விகிதாச்சார அளவுக்கு உத்தியோகம் கிடைக்கும் வரையில் இனிமேல் அரசாங்க உத்தியோகங்கள் யாவும் பார்ப்பனரல்லாதாருக்கே கொடுக்கப்பட வேண்டும்” என்ற புரட்சிகரமான தீர்மானம் ஒன்றை 1921, ஆகஸ்டு 5 இல் சட்ட மன்றத்தில் டாக்டர் சி.நடேசனார் கொண்டு வந்தார். பின்னர் நீதிக்கட்சியினர் வேண்டுகோளின்படி தீர்மானத்தைத் திரும்பப் பெற்றார். எல்லா வகுப்பினருக்கும் உத்தியோகத்தில் சமநீதி வழங்கும் வகையில் ஏற்கெனவே ரெவின்யூ துறையில் இருக்கும் நடைமுறையை விரிவுபடுத்தி, எல்லா துறைகளிலும் அதைக் கடைபிடிக்குமாறு செப்டம்பர் 16 இல் ஓர் ஆணையை நீதிக்கட்சி அரசாங்கம் பிறப்பித்தது. நீதிக்கட்சி ஆட்சியின் முதல் வகுப்புரிமை வழங்கும் ஆணை இதுவே ஆகும். பார்ப்பனரல்லாதாருக்கு அரசுப் பணியில் நுழைய ஓர் உத்திரவாதம் அளிக்கும் வகையில் அமைந்த முதல் அரசாணையான இது பார்ப்பன அதிகார வர்க்கத்தால் சரிவர அமுல்படுத்தப்படவில்லை.

நீதிக்கட்சியின், பனகல் அரசர் அமைச்சரவை, 1922 மார்ச் 25 இல் “பஞ்சமர், பறையர்” என்ற சொற் களை நீக்கி, ஆதி திராவிடர் என்றே இனி அழைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றி, அதனை அமுல்படுத்தியது. வேலை வாய்ப் போடு அன்றி பதவி உயர்விலும் வகுப்புவாரி பிரதி நிதித்துவம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்ற ஓர் ஆணையை நீதிக்கட்சி ஆட்சி ஆகஸ்டு 15 இல் வெளி யிட்டது. (M.R.O. Public Ordinary Service G.O.No.658 Dated 15.8.22 )  இதுவே நீதிக்கட்சி ஆட்சியின் இரண்டாவது வகுப்புரிமை ஆணையாகும்.

--- பெரியார் தளம் உதவியுடன் (periyarthalam)

Saturday, 7 November 2015

மக்களை நோக்கி ஒரு நெடும்பயணம்

மக்களை நேரடியாக சந்திக்கிற தனது "நமக்கு நாமே " பயணத்தின் மூன்றாவது கட்டத்தை நேற்று வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறார் திரு. ஸ்டாலின். சென்னை நீங்கலாக தமிழ்நாடு முழுவதும் பத்தாயிரம் கிலோமீட்டர்களுக்கு மேல் அவர் இந்த குறுகிய காலத்தில்  இதுவரை பயணித்திருக்கிறார் என்பது,  எனக்குத்தெரிந்து கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எந்த அரசியல் தலைவரும் செய்யாத ஒரு சாதனை.

ஏன் ஸ்டாலினின் இந்த பயணம் பெரிதும் பேசப்படுகிறது?  அவர் இதற்கு முன்னால் மக்களை சந்தித்ததில்லையா என்றால்,  இல்லை அவர் தொடர்ந்து மக்களை சந்திக்கிற ஒரு அரசியல்வாதியாகத்தான் இருந்து வருகிறார்.  ஸ்டாலின் என்ற பெயரைக்கேட்டவுடன் முதலில் என் மனக்கண்ணில் எழுகிற பிம்பம் எதுவென்றால்,  பதினாறு வருடங்களுக்கு முன்பாக ஒரு பெருமழைக்கால சென்னையில்,  ரெயின் கோட் அணிந்து,  பேண்ட்டை முட்டி வரை மடித்துவிட்டுக்கொண்டு தேங்கிய தண்ணீரில் நின்று கொண்டிருந்த அன்றைய சென்னை மேயர்  ஸ்டாலினின் அந்த உருவம் தான். அப்போதுதான் என் வாழ் நாளில் ஒரு அரசியல் தலைவரை மிக அருகில் வைத்து பார்க்கிற சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. அதன் பிறகு எத்தனையோ முறை அவரை நேரில் பார்த்திருந்தாலும் அந்த சம்பவமே எனக்கு அவருடைய அடையாளமாக மாறிப்போனது.

தான் துணை முதல்வராக இருந்த காலத்தில் காலையில் வாக்கிங் செல்லும்போது மக்கள் அவரை சந்திப்பது சென்னைவாசிகள் பரவலாக அறிந்த செய்தி.  ஸ்டாலின் மக்களை சந்திக்க செல்கிறார் என்று சொன்னால்,  "அதான் மாசாமாசம் சந்திக்கிறாரே,  இது என்ன புதுசா ஒரு மக்கள் சந்திப்பு " என்று கொளத்தூர் தொகுதி மக்கள் ஆச்சரியப்பட்டு சொன்னாலும் ஆச்சரியமில்லை. ஏனென்றால் அந்தளவுக்கு தன் தொகுதி மக்களை அவர் சந்தித்திருக்கிறார்.

சரி,  அப்போதெல்லாம் பேசப்படாத அவருடைய மக்கள் சந்திப்பு இப்போது மட்டும் ஏன் அதிகம் பேசப்படுகிறது என்றால்,  அது அவர் தேர்ந்தெடுத்துள்ள உத்தி.  ஒரு அரசியல் தலைவரின் சுற்றுப்பிரயாணம் போல இல்லாமல் மக்கள் தலைவரின் பயணம் போல காட்ட அவர் மிகுந்த மெனக்கெட்டுள்ளார். இந்த பயணத்தில் அவர் எங்குமே கறுப்பு சிவப்பு கரை வேட்டியை பயன்படுத்தவில்லை. தொண்டர்களை விட மக்களை சந்திக்கவே அவர் ஆர்வம் காட்டியிருக்கிறார். இதுவரை வழக்கமாக எந்த சுற்றுப்பிரயாணங்களை மேற்கொண்டபோதும் கூடுதலாக உள்கட்சி விவகாரங்களையும்  பார்ப்பவர் இந்தமுறை அதைத் தவிர்த்திருக்கிறார். மிக அதிக அளவில் பெண்களை சந்தித்திருக்கிறார். எந்த அரசியல் அறிவும் இல்லாத கன்னி வாக்காளர்களை கவருவது அவருடைய திட்டமாக இருக்கலாம்.   "கார்ப்பரேட் கம்பெனி பாணியில் திட்டமிடப்பட்டுள்ளது,  ஆலன் சொலே பேண்ட் அணிந்து மக்களை சந்திக்கிறார் " என்று விதவிதமாக விமர்சனங்கள் வந்தாலும்,  அவருடைய இந்த பயணம் ஒரு செய்தியை கோடிட்டுக்காட்டியுள்ளது. இனி தமிழ்நாட்டில் அரசியல் செய்ய வேண்டுமென்றால் அதற்கு மக்களை நோக்கி செல்லவேண்டியது என்ற அவசியத்தை அவர் காண்பித்துள்ளார். திட்டங்கள் மட்டும் மக்களை நோக்கி சென்றால் போதாது,  அரசியல்வாதிகளும் மக்களை நோக்கி செல்லவேண்டும் என்ற உண்மையை வெளிச்சமாக்கியிருக்கிறார்.  அவருடைய இந்த புது பாணியிலான உத்தி தேர்தலில் அவருக்கு வெற்றியை தேடித்தருமா இல்லையா என்று கணித்து சொல்வதற்கு நான் ஒன்றும் தேர்தல் ஜோதிடர் அல்ல. ஆனால் இதன் தாக்கம் இனிவரும் எதிர்கால அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ராஜா,  ராணி போன்ற மேட்டிமைத்தன அரசியல் கண்டிப்பாக மட்டுப்படும்.

சரி,  தமிழ்நாடு முழுவதும் பயணித்து மக்களை சந்திருக்கிறார் ஸ்டாலின்,  இனி அடுத்து என்ன என்றால்,  தேர்தலுக்கு முன்பாக மீண்டும் ஒருமுறை அவர் மக்களை சந்திப்பார். அதுதான் ஸ்டாலின். இதோ,  அவர் தனது மக்களை சந்திக்கும் அடுத்த ஒரு நெடும்பயணத்திற்கு தயாராகிவிட்டார்...!