கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை
(ஒருவர் பெற்றுள்ள செல்வங்களிலேயே கல்வி ஒன்று தான் உண்மையான செல்வம். மற்ற செல்வங்கள் எல்லாம் அழியக்கூடியது. கல்வி செல்வம் அழியாதது)
சீரான கல்வியை வழங்குதலும், பெறுதலும் இன்பம். அது ஒரு அரசின் கடமை. ஆளும் பாஜகவினருக்கு இதில் எந்த அளவு உடன்பாடு என்று பார்ப்போம்.
கடந்த சில ஆண்டுகளாக, பாட திட்டங்கள் காவிமயமாக்கப் படுவதை நாம் அறிவோம். 31 விழுக்காடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, 69 விழுக்காடு மக்களால் ஒதுக்கப்பட்ட ஒரு கட்சி எப்படி தம் எண்ணங்களை நம் மீது திணிக்கிறார்கள், திணிக்க துணிந்தார்கள் என்பது வியப்பே.
இந்தோ-ஆரிய மொழிகளை விட ஆங்கிலம் சிறந்ததா என கேள்வி எழுப்பாமல், இந்தியை திணிக்கும் நோக்கத்தில் ஆங்கிலம் இன்னும் 30-40 ஆண்டுகளில் அழியும் என்ற RSSன் கருத்து நகைப்புக்குறியது. http://tinyurl.com/zgfvaaf
ஆக, RSS ஆதரிக்கும் பாடத்திட்டத்தில் என்ன இருக்கிறது?
1. மகாபாரதம், ராமாயணம், நடந்த கதை. சரஸ்வதி நதி இருந்தது உண்மை. பறக்கும் ஊர்திகளும், மகிழ்வூந்துகளும் (Cars) இருந்தது உண்மை.
2. ஆரிய இனம் இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு குடியேறியது. பூமிப்பந்தின் வட துருவம், இன்றைய பிகாரில் இருந்தது, அந்நாளில்.
3. முகலாய படையெடுப்பிற்கு முன் தலித்துகள் இந்தியாவில் இல்லை.
4. உலகின் மிக பழமையான நாகரீகம் இந்தியாவில் மட்டுமே இருந்தது. அமெரிக்க பழங்குடியினர் பேசும் மொழி, இந்தியாவில் இருந்து சென்றது. தசம முறைமை (decimal system) மற்றும் சுழி (zero) வேதங்களில் இருந்து எடுக்கப்பட்டது
5. சமுத்திர குப்தனால் கட்டப்பட்ட விஷ்ணு ஸ்தம்பாவே பின்னாளில் குதுப் மினார் ஆனது.
6. அசோகரின் அஹிம்சை இந்தியர்களை கோழைகள் ஆக்கியது.
குஜராத்திலும் ஹரியானாவிலும் பாஜக அரசு தினனாத் பத்ரா என்பவர் எழுதிய புத்தகங்களை பாடத்திட்டத்தில் வைத்திருக்கிறது. “அகண்ட பாரதம்” என்ற நச்சை புத்தகங்களில் புகுத்தி, நடுநிலை வரலாற்று ஆய்வாளர்களால் கண்டிக்கப்பட்டவர் தான் இந்த பத்ரா. வலது சாரியினரின் நோக்கப்படி, இந்தியாவின் வரைபடத்தை மாற்றி அகண்ட பாரதம் அமைக்க வேண்டும் என்றவர். ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், பூடான், நேபாள், பங்களாதேஷ், திபத்து, பர்மா, இலங்கை உள்ளடக்க வேண்டுமாம்.
விடுதலைக்கு பின் 52 ஆண்டுகள் வரை RSS அலுவலகங்களில் மூவர்ண கொடியை ஏற்ற விடாத RSS, இன்று பல்கலை கழகங்களில் மூவர்ண கொடி ஏற்றி தேச பற்றை காட்டுகிறார்களா?
http://tinyurl.com/hnucpoz
பத்ராவின் கோணங்கித்தனமான புத்தகங்கள், ஹரியானாவில், 7ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை.
http://tinyurl.com/qh8vsah
இந்த இணைப்பில் ஒரு RSS ஊழியரின் நேர்காணல்.
….
நேர்காண்பவர் : உங்கள் சிறப்பு?
RSS ஊழியர்: Vedic Maths. திட்டம் என்னவெனில், கிருத்துவர்களும், இஸ்லாமியரும் படிக்கும் பள்ளிகளில் வேத கணிதம் சொல்லி தருகிரோம் என கூறி புகுந்து, குழந்தைகளை ஹிந்துத்வா பக்கம் இழுப்பதே.
நே.கா: விரிவாக சொல்லுங்கள்.
RSS: கணிதம் விரைவாக Vedic Maths வழியாக பயிலலாம் என கூறி, குழந்தைகளை கவர்ந்து
….
http://tinyurl.com/yamlddnp
துணை வேந்தர் தேர்வில் சங்கித்தனம், ABVP குண்டர்களால் மிரட்டல் என கல்வி நிலையங்களை சங்கிகள் ஆக்கிரமிப்பது கண்கூடு.
Banaras Hindu பல்கலைகழகத்தில் சங்கி ஒருவரை துணைவேந்தராக்கி….
https://tinyurl.com/yag3yj77
51 பல்கலைகழக துணைவேந்தர்களை RSS பயிற்சி / workshop ற்கு வரவைத்து கட்டாய மூளை சலவை
http://tinyurl.com/ybpw9fr8
JNU வில் ABVP குண்டர்கள் நடத்திய அடிதடி.
http://tinyurl.com/yb8uv5aw
கன்ஹயா, ரோஹித்…..
http://tinyurl.com/ybs9aqfs
ரோஹித்தின் தற்கொலை...
http://tinyurl.com/ybosqty8
BHU வில் பாலியல் தொல்லைகள்.
http://tinyurl.com/y8ufhpck
ABVP குண்டர்களால் தொல்லைகள்
http://tinyurl.com/y87723qa
இவை போக, மோடி அரசில் ஆய்விற்காக UGC வழங்கும் உதவித்தொகை பெரிதும் குறைக்கப்பட்டிருக்கிறது. ஆச்சரியம், பசு மூத்திரத்தின் மருத்துவ குணங்களை ஆய்வு செய்ய உதவித்தொகை கூட்டப்பட்டுள்ளது.
http://tinyurl.com/ycn48jbz
http://tinyurl.com/y7qrxd2k
http://tinyurl.com/y7ta7vte
உலகின் முதல் ப்ளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது விநாயகருக்கு என்ற மோடியிடம் வேறு என்ன எதிர் பார்க்கமுடியும்? பசு காற்றை சுத்தப் படுத்துகிறது…ராஜஸ்தான் கல்வி அமைச்சர். “ஆக்சிஜனை உள் வாங்கி சுத்தமாக்கி வெளிவிடுகிறது…பசு”
குஜராத் பள்ளிகளில் கட்டாயமயமாக்கப் பட்ட சரஸ்வதி வந்தனம்...
http://tinyurl.com/ya9l37wd
Plastic surgery --- விநாயகர் ….
https://youtu.be/NeIWu1NLuzE
ஹிந்துத்வாவின் மரபணு அறிவியல்….
http://tinyurl.com/ht6vjzf
ஹிந்துத்வாவின் மரபணு அறிவியல்….
இது போக பள்ளிகளில் கட்டாய யோகா வகுப்புகள் ...
பாடத்திட்டங்களை காவி மயப்படுத்துவதென்பது பிள்ளைகள் குடிக்கிற பாலில் நஞ்சு கலப்பதை போல. நஞ்சு பரவுவதை போல காவிச்சிந்தனை கல்வி மூலமாக பரவவேண்டும் என்பதையே பாஜக விரும்புகிறது.
சுதந்திரப் போராட்டத்தின் போது வெள்ளையருக்கு மண்டியிட்டு மன்னிப்புக் கடிதம் எழுதி கெஞ்சியவர்களை எல்லாம் வீர தீர அவதார புருஷர்களாக படிக்கவேண்டிய ஒரு அவல நிலை நம் பிள்ளைகளுக்கு வரலாம்..! " வண்ணான் துணி துவைக்கிறான், குடியானவன் ஏர் ஓட்டுகிறான், ஐயர் நல்லவர் - பாடம் படிக்கிறா "ர்" போன்ற விஷ விதைகள் மீண்டும் தூவப்படும்..! இந்தியாவை விட பின்தங்கிய நாடுகள் எல்லாம் கல்வியில் பெரும் பாய்ச்சலை நோக்கி நகரும் இந்த சூழ்நிலையில் இந்திய மாணவர்கள் மாட்டு மூத்திரத்தின் மகிமையையும் வேத கால பெருமையையும் படிக்கவேண்டிய அவல நிலைக்குத் தள்ளுவது தான் கல்வியை காவி மயமாக்குவதின் நோக்கம் ..!
©Boopathi PT